Nagapattinam

News August 11, 2024

நாகையில் மேலும் ஒரு உயிரிழப்பு

image

வேளாங்கண்ணியில் காணாமல் போன மாணவனை தேடும்படியில் ஈடுபட்டிருந்த போது கன்னிக் கோவில் அருகே 13 வயதான வீரமலை என்ற மாணவன் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளார். பின்னர் இருவர் உடலையும் மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 11, 2024

நாகையில் கடலில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

image

வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் இங்கு வருகை புரிந்துள்ளார். அப்போது அருகே உள்ள கடற்கரைக்கு குளிக்க சென்ற மாணவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 11, 2024

நாகையில் ஒ.எஸ்.மணியன் தலைமையில் போராட்டம் அறிவிப்பு

image

நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக மீனவரணி சார்பில், எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. நாகூர் சம்பா தோட்டம் சமுதாய கூடத்தை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி மறுப்பது மற்றும் அப்பகுதி மீனவர்களின் பல அடிப்படை உரிமை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், மீனவர்களுக்கு உரிய சுதந்திரம் கிடைக்க வேண்டியும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2024

புத்தக திருவிழாவில் நுழைவு கட்டணம் இல்லை

image

நாகை ஐடிஐ வளாகத்தில் ஆக.16 தொடங்கவுள்ள 3வது புத்தகத்திருவிழா 10 நாட்களுக்கு நாள்தோறும் காலை 11மணி முதல் மாலை வரை நடைபெறும். மாலையில் கலை நிகழ்ச்சகள், பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர்கள், இலக்கிய உரைகள் நடைபெறும். இந்த புத்தகத்திருவிழாவிற்கு வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லை என ஆட்சியர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார்.

News August 11, 2024

டோல்கேட்டில் இலவச அனுமதி தர கோரிக்கை

image

நாகை மக்களவை உறுப்பினர் வை.செல்வராஜ் நேற்று மாலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனைத்து டோல்கேட்டுகள் வழியாக இலவசமாக பயணிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

News August 11, 2024

கடற்கொள்ளையர்கள் தாக்கி மீனவர்கள் படுகாயம்

image

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 மீனவர்கள் படுகாயமடைந்தனர். இதில், படுகாயமடைந்த சிவசங்கர், செல்வா, ராஜகோபால், தனசேகரன் ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகையில் இருந்து மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 10, 2024

நாகை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 32 மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 10, 2024

நாகையில் செல்லப்பிராணிகள் கண்காட்சி; ஆட்சியர் தகவல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசினர் தொழில் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ள 3வது புத்தக திருவிழாவில், கால்நடை பராமரிப்புத்துறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் கண்காட்சி 17.08.2024 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் செல்லப்பிராணிக்கு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

News August 10, 2024

பழமையான தேவாலயங்களை புனரமைக்க வாய்ப்பு

image

சொந்த பட்டா இடத்தில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் பணிக்காக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தேவாலயத்தின் கட்டட ஆயுட்காலம் 10-15 ஆண்டுகள் வரை இருந்தால் அதிகபட்சம் ரூ.10 லட்சம், 20 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.15 லட்சம், 25 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் இருந்தால் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படுமென மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

நாகையில் சாகச நிகழ்ச்சி

image

நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஐடிஐ வளாகத்தில் நடைபெற உள்ள மூன்றாவது புத்தகக் கண்காட்சிக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காவல் துறையினரின் பயிற்சி பெற்ற நாய்களை கொண்டு சாகச நிகழ்ச்சிகள் ஆக.17 நடத்தப்பட்டு இறுதியாக தேர்வு செய்யப்பட்ட சிறந்த செல்ல பிராணிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஷேர் செய்யவும்.

error: Content is protected !!