Nagapattinam

News September 7, 2024

தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.

image

நாகை மாவட்டத்தில் அகில இந்திய தொழிற்தேர்வில் தனி தேர்தர்களாக, வரும் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் பயிற்சிக்கு கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் (www.skilltraining.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

நாகையில் நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

image

டாடா எலக்ட்ரானிக் குழுமம் சார்பாக பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாகையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 07.09.2024 அன்று நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

நாகை மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

வெள்ளப்பள்ளம், அண்ணா பேட்டை மீனவ கிராமங்களில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள சாகர் மித்ரா பணி இடங்களுக்கு சம்பந்தபட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட, இளங்கலை பட்டப்படிப்பில் மீன் வள அறிவியல் கடல் உயிரியல் விலங்கியல் படித்தவர்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் நாகை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

நாகை மாவட்டத்தில் விதை நெல் தட்டுப்பாடு

image

நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை தாங்கும் நீண்ட கால பயிரான சி.ஆர். 1009 விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, மருதூர் போன்ற பகுதிகளில் விதை நெல் தட்டுப்பாடு உள்ளதால் தனியாரிடம் விலை உயர்வு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 6, 2024

நாகை SC/ST மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி-2025 தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியாக பட்டப்படிப்பு தேர்ச்சியும், 21 முதல் 36 வயதுடையவராக இருத்தல் அவசியமாகும். www.tahdco.com என்ற இணைய தளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2024

நாகை மீனவர்கள் 11 பேர் விடுதலை

image

கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி நெடுந்தீவு அருகே விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்த 11 நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அனைவரது சிறைக்காவலும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் 11 பேரையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயினும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகின் நிலைகுறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

News September 6, 2024

நாகை மாவட்ட டி.எஸ்.பி சஸ்பெண்ட்

image

நாகை மாவட்டத்தின் குற்றப்பிரிவு டி.எஸ்.பி-யாக பணிபுரிந்து வந்த மகேஸ்வரன் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றிய போது இவர் மீது பாலியல் விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் டி.எஸ்.பி மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

News September 5, 2024

நாகை மாவட்டத்தில் 14 போ் கைது

image

நாகை மாவட்டத்தில் சாகா் கவாச் ஒத்திகையில் தீவிரவாதிகளாக ஊடுருவ முயன்ற 14 பேரை போலீஸாா் கைது செய்தனா். நாகை கடலோரப் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளா் ரமேஷ் குமாா் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். இதில் நாகூருக்கு கிழக்கே 7 பேரை கைது செய்தனர். இதேபோல, நாகூா் ஆயில் ஜெட்டியில் பைபா் படகில் வந்த 2 போ், வேளாங்கண்ணியில் 2 போ், செருதூா் கடற்கரையில் 3 பேரை கைது செய்யப்பட்டனா்.

News September 4, 2024

மக்கள் குறைகளை கேட்டறிந்த நாகை எஸ்.பி.

image

நாகை மாவட்ட எஸ்.பி. வாராந்திர மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கி பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 8 மனுக்களை பெற்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை 8428103090 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

News September 4, 2024

நாகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி&கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் செப்டம்பர் 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாகையில் உள்ள ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!