India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதிய குளம் வெட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை துரிதமாக திட்டமிட்ட காலத்தில் முடித்த பணியாளர்களை ஆட்சியர் பாராட்டியதோடு, இதேபோல ஆர்வத்தோடு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் வரை செல்லும் டெமு ரயில் வரும் செப்.11, 13, 15, 18, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருவாரூர் -காரைக்கால் இடையேயும், இன்று செப். 10, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் -காரைக்கால் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவிகளுக்கு அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் செப். 10 மற்றும் செப். 11 தேதிகளில் ஆண்டவர் செவிலியர் கல்லூரி, பொரவாச்சேரியில் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நாகை மாவட்டத்துக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் இன்று (செப்.10) நாகை மாவட்ட விளையாட்டரங்கம் மற்றும் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளுக்கு முன்பதிவு செய்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்குமாறு நாகை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாகையில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 200 மனுக்களை பெற்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் நாட்டுபுற கலைஞர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நாளை 10ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பங்கேற்று விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளியில் பயின்று இடைநின்ற மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அதில் பள்ளி பருவத்தில் வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி நாளை (செப்.10) இ. ஜி. எஸ். பிள்ளை கல்லூரியில் நடைபெறும் “உயர்வுக்கு படி” என்ற வழிகாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சக்தி விநாயகர் குழு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாகையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். அதன்படி, நாகையில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் நேற்று புதிய கடற்கரை–யில் கரைக்கப்பட்டது. இதில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடந்தது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது வடக்கு ஒடிஸா – மேற்குவங்க கடற்கரை நோக்கி நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்று மற்றும் கனமழை வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு முகாம் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் வரும் செப்.10 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 10, 11, 12-ஆம் வகுப்பு பயின்று பல்வேறு சூழல்களால் மேற்படிப்பை தொடர முடியாதவர்களை கண்டறிந்து, அவர்கள் தொடர் கல்வி பெற உடனடி சேர்க்கை மற்றும் கல்வி கடன் வழங்கப்படும். இம்முகாமில் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.