India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை குறித்து செப். 20 முதல் 3 நாள்கள் போலீஸாா் தொடா் தேடுதல் வேட்டை நடத்தினா். இதில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமாா், ஜீவா, முகமது ரியாத், அசாருதின், அ. சிலம்பரசன், இ. சிலம்பரசன், ரெனிஜியாஸ், தினேஷ்குமாா், விக்னேஷ், முகமது அப்பாஸ், பிரதீஷ், கோபால் ஆகிய 12 பேரை கைது செய்து, 690 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதியும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 16ஆம் தேதியும் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9500272309 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் இணைய சேவையில் வரும் கஸ்டமர் கேர் எண்னை தொடர்பு கொள்ளும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் OTP எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும், இணைய வழி குற்றங்கள் குறித்த இலவச சேவை எண் 1930ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் வெடி உற்பத்தி செய்யும் இடத்தில் இன்று மயிலாடுதுறை உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்போது வெடி உற்பத்தி செய்யும் இடங்களில் நடைபெறும் முன்னெச்சரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமன் உள்ளிட்ட போலீசார் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் மொத்தமாக 388 மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14,500 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 1427.96 கோடி நேரடி வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஊரகப்பகுதி மட்டுமில்லாமல் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை அருகே இருச்சக்கர வாகனத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் விஜயபாலன் போலீசாரல் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை பட்டமங்கலம் அருகே நடந்து சென்ற மலர்க்கொடி என்பவரிடம் 5 சவரன் தங்கநகையை இருச்சக்கர வாகனத்தில் வந்த விஜயபாலன் பறித்து சென்றார்.
ஆன்லைனில் வாங்கிய 6 லட்சம் கடனை அடைக்க வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 10 நாட்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பிரியா என்பவருக்கு சுய தொழில் தொடங்க ஏதுவாக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று வழங்கினார். அப்போது துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருச்செந்தூர் சென்னை ரயில் செப்டம்பர் 24 , 26 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி மட்டும் திருச்செந்தூரிலிருந்து 1 மணி நேரம் 30 நிமிடம் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் மயிலாடுதுறை மார்க்கமாக செல்வதால் வழக்கமான நேரத்தை விட குறிப்பிட்ட நாட்களில் மட்டும் காலதாமதமாக ரயில் மயிலாடுதுறை வந்து சேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் பகுதியை சேர்ந்த 37 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.