India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
309 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கடன் கேட்டு விண்ணப்பம், விதவை உதவித்தொகை போன்ற மனுக்கள் தரப்பட்டன இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை குத்தாலம் இடையே ரயில்வே லைனில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை முன்னிட்டு தேரழுந்தூர் அருகே கோமல் ரோடு ரயில்வே கேட் நாளை காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மாற்று வழியில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு நிதி ஆண்டில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50.29 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் http//www/tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 4 வெடிப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் வெடி தயாரிக்கும் தொழிலை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து சீர்காழி தாலுகா திட்டை கிராமத்தில் உள்ள வெடி தொழிற்சாலை, குத்தாலம் அருகே திருவாலங்காடு பகுதியில் உள்ள 2 தொழிற்சாலை, மூவலூர் கிராமத்தில் உள்ள தொழிற்சாலை உள்ளிட்டவற்றை தற்காலிக நிறுத்தம் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சென்னைக்கு மயிலாடுதுறை வழியாக பகல் நேரத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தஞ்சை எம்.பி முரசொலி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருச்சியிலிருந்து அதிகாலை 5.35 புறப்பட்டு, தஞ்சைக்கு 6.25 மணிக்கு வந்தடையும் ரயில் மயிலாடுதுறை, சீர்காழி வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12.35 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடியில் உள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை இன்று தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் சமய மூர்த்தி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் இருந்தனர்.
தரங்கம்பாடியில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அகழ் வைப்பகத்தை இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், மீனவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா நேற்று நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை – திருச்சி செல்லும் ரயில் மயிலாடுதுறையிலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு சென்று அங்கிருந்து மீண்டும் திருச்சிக்கு சென்று வந்தது. இந்நிலையில் இரவு 7:10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில் நேரடியாக திருச்சிக்கு இரவு 10.30 மணிக்கு சென்று சேரும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 9ஆம் தேதி முதல் திருச்சிக்கு இந்த ரயில் போக்குவரத்து துவங்குகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ஆம் தேதியும், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு 16ஆம் தேதி 6 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் தனித்தனியே மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடக்கிறது. மேலும் 8248686391, 9500272309 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.