India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி செம்மங்குளம் பகுதியை சுற்றி பொருத்தப்பட்ட தானியங்கி கேமராவில் சிறுத்தையின் உருவம் தெளிவாக கிடைக்கப்பெற்றுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் 3 நாட்களாக நகர்புற பகுதியில் ஊலா வரும் சிறுத்தையைப் பிடிக்க 3 கூண்டுகள் அமைத்தும், சிறுத்தை சிக்காததால் பதற்றம் அதிகரித்துள்ளது. தற்போது சிறுத்தையைப் பிடிக்க கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன் வருகைப் புரிந்துள்ளார். மேலும் சிறுத்தை தென்பட்ட பகுதிகளில் 8 மோப்ப நாய்களுடன் அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை, குத்தாலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தேரழுந்தூர் ஊராட்சியில் உள்ள பள்ளிவாசலில் இன்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு பவுன்ராஜை ஆதரித்து அதிமுக மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பூம்புகார் எம்எல்ஏவுமான எஸ்.பவுன்ராஜ் பள்ளிவாசல் ஜமாத்தார்களை ஆரத் தழுவி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு ஆதரவு திரட்டினார்.
மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது இனிமேல் ஒன்றிய பிரதமர் பெயர் மிஸ்டர் 29 பைசா என்றும், இனிமேல் நீங்கள் அவரை அப்படித்தான் கூப்பிட வேண்டும் என்றும் விமர்சித்தார். அப்போதுதான் அவர் மண்டையில் உரைக்கும் என கூறினார். தமிழ்நாடு ஜிஎஸ்டி வரியாக 1 ரூபாய் வழங்கும் நிலையில் அதிலிருந்து 29 பைசா மட்டுமே திருப்பி வழங்குவதை குற்றம் சாட்டினார்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே சிறுத்தையை பிடிக்கும் பணியில் வன காவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே மயிலாடுதுறை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் பாபு போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நகர அதிமுக நிர்வாகிகள் பல்வேறு தெருக்களில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டனர். மேலும் பொது மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி கை சின்னத்தில் வாக்கினை செலுத்துமாறு அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3வது நாளாக சிறுத்தையை பிடிக்க மதுரை மாவட்டத்தில் இருந்து 3 ராட்சத கூண்டுகள், வலைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. சிறுத்தை நடமாடிய பகுதிகளில் சென்சார் பொருந்திய கேமாராக்களுடன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் ஆனைமலை புலிகள் காப்பக வன, வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை ஆரோக்கிநாதபுரம் பகுதியை சேர்ந்த 9 பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஏப்ரல் 5ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை வைத்து பிடிப்பதற்காக திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 5 வனத்துறை அலுவலர்கள் மற்றும் வால்பாறையில் இருந்து 5 வனத்துறை அலுவலர்கள் வருகை தர உள்ளனர். எனவே ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.