India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தெப்பக்குளத்திற்கு அருகில் உள்ள இடத்தில் தான் ஜடாயு குண்டம் உள்ளது. ஜடாயுவுக்கு ராமர் இங்குதான் இறுதி காரியம் செய்ததாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது செவ்வாய் ஸ்தலமாக உள்ளது. அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
சீர்காழி அருகே உள்ள புகழ்பெற்ற பூம்புகார் சுற்றுலா தளத்திற்கு இந்திய கடற்படை வீரர்கள் இன்று வருகை புரிய உள்ளனர். வீரர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி சிறப்பு வரவேற்பு அளித்து இந்திய கடற்படை வீரர்கள் சுற்றுலா தளங்களை பார்வையிட்டு வருவதை துவக்கி வைக்க உள்ளார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் சார்பில் இன்று மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் யூனியன் கிளப் சார்பில் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் எனவும் இதில் பங்கேற்று பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே பழையபாளையம், சொசைட்டி தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (70). பம்பு பிட்டராக வேலை பார்த்துவந்த இவர் குடும்ப பிரச்சினை காரணமாக இன்று கொள்ளிடம் சோதனை சாவடி அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்திவிட்டு உயிருக்கு போராடிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளார். தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடம் செக் போஸ்ட் அருகே அடையாளம் தெரியாத சுமார் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து சடலமாக கிடந்துள்ளார். காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சீா்காழி அருகே சிங்காரதோப்பை சோ்ந்தவா் ராஜேந்திரன். இவருக்கும், அதே தெருவை சோ்ந்த பாண்டியன், ரங்கசாமி, ஜெயக்குமாா் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2015, ஆக.16-ஆம் தேதி இரவு ராஜேந்திரனை தாக்கிய அவரது வீட்டு சுற்றுச் சுவரை 8 பேர் சேதப்படுத்தினா். புகாரின்பேரில் சீா்காழி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில், 8 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் யூனியன் கிளப் இணைந்து நடத்தும் குறு தனியார் வேலை வாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட பணிகள் இருக்கின்றன. தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் அன்றே பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் கடை வீதியில் இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இரண்டு தரப்பினர் ஆஜராக உள்ள நிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குத்தாலம் அருகே 108 திவ்ய தேசங்களில் பத்தாவது ஸ்தலமாக போற்றப்படும் ஆமருவிப்பெருமாள் கோயில் தேரழுந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளிய பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.