India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை அபயாம்பிகை உடனாய மயூரநாத சுவாமி திருக்கோயில் துலா உற்சவப் பெருவிழாவில் நேற்று குருமகா சந்திதானம் அருளாணையின் வண்ணம் விநாயகர் துவஜாரோகணம் சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியில் இருந்த 2.5 பவுன் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர் சில தினங்களுக்கு முன்பு திருடி சென்றார். இது குறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ் என்பவரை நேற்று கைது செய்து நகையை மீட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பரந்தாமன்(39) நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பெருஞ்சேரி சுந்தரப்பன்சாவடி அருகே எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதயறிந்த முதல்வர் ஸ்டாலின் காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கிட நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக போலீஸ் கேன்டீனில் பணியாற்றி வருவபவர் காவலர் பரந்தாமன். இன்று மதியம் உணவு சாப்பிட சொந்த ஊரான எடகுடிக்கு டூவீலரில் சென்றவர் மீது சுந்தரப்பன்சாவடி அருகே அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே பரந்தாமன் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 1695.146 மெட்ரிக் டன் யூரியா, 831.702 மெட்ரிக் டன் டி.ஏ.பி. 627.914 மெட்ரிக் டன் பொட்டாஷ், 916.550 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் என ஆக மொத்தம் 4071.312 மெ.டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சரிபார்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்கள் காவல்துறையினரின் உதவி பெற 100 மற்றும் 04364 – 240100 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து புகார்கள் ஏதேனும் இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சீர்காழி ஒன்றியம், சட்டநாதபுரம் கிராம வரவுசெலவு கணக்குகளை கடந்த 2023ஆம் ஆண்டு ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். அரசு விதிமுறைகளை மீறி ஊராட்சி நிதியில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதில் குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தியை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று உத்தரவிட்டுள்ளார்
கொள்ளிடம் அருகே சின்ன ஓதவந்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜான்(65). கூலித் தொழிலாளியான இவர் இன்று புதுமணியாற்றில் உள்ள கதவணையில் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக ஜான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.