India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பொதுப்பிரிவில் 5.5 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட திருமஞ்சன வீதி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்காலினை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இரண்டாவது நாளாக இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி சேர்மன் செல்வராஜூ உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக நவம்பர் 3ஆம் தேதி இன்று சென்னை செல்வதற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தொடர்ந்து இரவு 10.50 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு மயிலாடுதுறை வருகை தந்து நவம்பர் 4ஆம் தேதி காலை 6.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.
கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. லாரியை ஓட்டி வந்த சித்தமல்லி ரோட்டு தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளரான வல்லம்படுகையை சேர்ந்த பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுத்துறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக சேலம் செல்லும் ரயிலானது (வண்டி எண்.16811), நவம்பர் மாதம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சேலம் வரை செல்லாமல் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். பின்னர் கரூரில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்பட்டு இரவு மயிலாடுதுறையை ரயில் வந்தடையும் என ரயில்வே துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மயிலாடுதுறை முழுவதும் சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா மயிலாடுதுறை மக்களுக்கு இன்று தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாப்படும் நிலையில், பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மயிலாடுதுறை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். SHARE IT.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை. SHARE IT.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார். இப்பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7,61, 221. ஆண் வாக்காளர்கள் 3,75,500, பெண் வாக்காளர்கள் 3,85,678, மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 43 பேர் ஆகும். மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். SHARE IT.
Sorry, no posts matched your criteria.