Mayiladuthurai

News November 6, 2024

மயிலாடுதுறையில் 261 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது. தொடர்பாக 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 261 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 830 கிலோ கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 200 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News November 6, 2024

மயிலாடுதுறையில் நவ.15 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு நவ.15 ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவ.23 ஆம் தேதி (சனிக்கிழமை ) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷார் செய்யவும்

News November 5, 2024

மயிலாடுதுறைக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவத்தின் கடை முக தீர்த்தவாரி வரும் 15ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை கஞ்சா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து தற்போது வரை 28 கிலோ கிராம் கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

News November 5, 2024

அமரன் படக்குழுவிற்கு மயிலாடுதுறை எம்பி வாழ்த்து

image

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் மயிலாடுதுறை எம்பி சுதா ஆகியோர் படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இத்திரைப்படத்தை அனைவரும் காண வேண்டும் என மயிலாடுதுறை எம்பி தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் போதை பொருட்களின் விற்பனை குறித்து 9626169492 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவும் , வாட்ஸ் அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்பி ஜி.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். SHAREIT

News November 4, 2024

மயிலாடுதுறைக்கு காலதாமதமாக வர உள்ள ரயில்

image

திருச்செந்தூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் ரயில் 2 மணி நேரம் காலதாமதமாக 10.25 மணிக்கு நாளை நவம்பர் 5ஆம் தேதி திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக வரும் என கூறப்பட்டுள்ளது.

News November 4, 2024

மயிலாடுதுறை விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

முதலமைச்சர் அவர்களின் மாநில அளவிலான விளையாட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. எனவே மயிலாடுதுறை விளையாட்டு வீரர்கள் இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு வருகின்ற நவம்பர் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04364-240050 , 7401703459 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

மயிலாடுதுறையில் நாளை மின்தடை 

image

மயிலாடுதுறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டவுன் இரண்டு மற்றும் கூறைநாடு மின்பாதையில் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து திருவாரூர் சாலை, சீனிவாசபுரம், கூறைநாடு, காவேரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

error: Content is protected !!