Mayiladuthurai

News November 10, 2024

மயிலாடுதுறை: முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க <>லிங்க்<<>> என்ற இணையதளம் மூலம் வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 9, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான இரசாயன உரங்கள் போதிய அளவிற்கு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 65,687 எக்டேர் பரப்பளவில் நடப்பு சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் யூரியா 759 மெட்ரிக் டன்னும், டிஏபி 344 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 651 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 449 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

மயிலாடுதுறை: பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை, நிறுவன செயலாளர் இடைநிலை செலவு, மேலாண்மை கணக்காளர் ஆகிய பதவிகளுக்கு போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com-இல் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

விவசாயிகளுக்கு மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் உரம் வாங்கிச்செல்லும் போது தங்கள் ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள விற்பனை மையங்களை அணுகி விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் உரக் கடைகளில் கூடுதல் விலைக்கு உரத்தினை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

மயிலாடுதுறை மாவட்ட மாணவிகள் கபடி போட்டியில் பங்கேற்பு

image

தமிழ்நாடு மாநில 50-வது ஜூனியர் பெண்கள் கபடி போட்டி திருவண்ணாமலையில் நடைபெறுகின்றது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணியினர், அடுத்த மாதம் உத்தரகாண்டில் நடைபெறும் 50 வது ஜூனியர் தேசிய கபடி இறுதி போட்டியில் பங்கேற்கலாம். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 18 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உரிய பயிற்சியுடன் திருவண்ணமணலை அழைத்து செல்லப்பட்டனர்.

News November 9, 2024

மயிலாடுதுறையில் இன்று மின்தடை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் இன்று (நவ.09) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருவெண்காடு, கிடாரங்கொண்டான், எடமணல், வைதீஸ்வரர் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், கீழையூர், செம்பனார்கோவில், பரசலூர், புத்தூர், சீர்காழி டவுன், குலசந்திரபுரம், பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப  பணிகள் பதவிகளுக்கான தேர்வு எதிர்வரும் 09.11.2024 சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. தொடர்ந்து காலையில் சரியாக 9 மணிக்குள்ளும் , மதியம் 2 மணிக்குள்ளும் தேர்வு எழுத வராதவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர்-07 (வியாழன்), 08 (வெள்ளி) , 09 (சனி), 10 (ஞாயிறு), 12 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கூறியுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 6, 2024

மயிலாடுதுறையில் 261 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது. தொடர்பாக 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 261 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 830 கிலோ கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 200 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News November 6, 2024

மயிலாடுதுறை ரேஷன் கடையில் வேலை: நாளை கடைசி நாள்

image

மயிலாடுதுறையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள், கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மயிலாடுதுறையில் 45 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!