Mayiladuthurai

News November 13, 2024

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் ஆட்சியர் ஆய்வு

image

சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட அகர திருக்கோலக்கா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதனை அறிந்த மயிலாடுதுறை ஆட்சியர் அப்பகுதியில் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். தொடர்ந்து மழை நீரை வடிய வைக்கும் பணிகளை தீவிரப்படுத்தினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News November 13, 2024

மயிலாடுதுறையில் மின் நிறுத்தம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி டவுன் மூன்று மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புதுத்தெரு, நலத்துக்குடி, தெற்கு வீதி, தரங்கை சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும். குறிப்பாக கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

News November 12, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரம் கனமழை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை முன்னிட்டு, கடலோர தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (நவ.12) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!

News November 12, 2024

சீர்காழியில் புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

image

சீர்காழி நகராட்சி ஆணையராக எம் எஸ் மஞ்சுளா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சீர்காழி நகராட்சி ஆணையர் பொறுப்பு கடந்த சில மாதங்களாக காலியாக இருந்து வந்தது. மயிலாடுதுறை ஆணையர் சங்கர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில் தற்போது மஞ்சுளா ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவருக்கு சீர்காழி நகராட்சி அனைத்து நிலை அலுவலர்கள், ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News November 12, 2024

மயிலாடுதுறையில் காவலர் பணியிடை நீக்கம்

image

மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் இளைஞரை சாலையில் உதைத்துத் தள்ளி தாக்கியதாகவும், சாதியை குறிப்பிடும் வகையில் விமர்சித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து திவிக மாவட்ட செயலாளர் மகேஷ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி இன்று உத்தரவிட்டார்.

News November 11, 2024

குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கினர். மேலும் கூட்டத்தின் நிறைவில் மொத்தமாக 294 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

News November 10, 2024

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வாழ்த்து

image

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா இன்று நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சால்வை அணிவித்து வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

News November 10, 2024

மயிலாடுதுறை: 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

image

மயிலாடுதுறை கிழக்கு ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் தலைமையில் இன்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து கட்சிக்கு வரவேற்றார். சீர்காழி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தினேஷ்குமார் மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 10, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேவையான உரங்கள் இருப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேவையான உரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான யூரியா உரங்கள், உர நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டு 2900 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 2700 மெட்ரிக் டன் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் ஆகக் கூடுதல் 5600 மெட்ரிக்டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!