India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மழை பெய்வதால் சூலை வைக்க முடியாமலும் மழையால் வேலை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.இதனால் மழையின் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யா டிஎன்பிசி குருப் 1 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து நீலகிரி மாவட்டத்தின் (Deputy collector) ஆக பணி நியமனம் பெற்றுள்ளார். குருப் 1 தேர்வில் ஐந்தாம் இடம் பிடித்த அதே மாவட்டத்தைச் சேர்ந்த திரு நிர்மல்குமார் நீலகிரி DSP ஆக பணிநியமன பெற்று இருவரும் ஒரே மாவட்டத்தில் பணி நியமன பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் ரயிலானது நாளை நவம்பர் 17ஆம் தேதி ஒரு நாள் மட்டும் கரூர் வரை மட்டுமே செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் செல்பவர்கள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த சகோதர-சகோதரி அஸ்வின் மற்றும் அஸ்விதா ஆகியோர் தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இதற்காக கடந்த 14-ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இருவருக்கு விருது வழங்கி சிறப்பித்தார். இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் சாதனை புரிந்த மாணவர்களை நேரில் அழைத்து இன்று பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து தொடக்கப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் வட்டாட்சியர் அருள்ஜோதி உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8,09,29,336 மதிப்பில் 11,434 நபர்களுக்கு மருத்துவ சிசிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக
மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையின் அடையாளங்களில் ஒன்றான மயிலாடுதுறை ஐப்பசி துலா உற்சவம் கடந்த மாதம் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. துலா உற்சவத்தின் 28 நாட்களும் சிறப்பாக நடைபெற்ற நிலையில் தான் சிகர நிகழ்வான தேரோட்டம் நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது. கொட்டும் மழையிலும் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். குறிப்பாக மயிலாடுதுறை காவல்துறை சார்பில் 500க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் அருகே கடலோர பழையாறு கிராமத்தில் மடவாமேடு செல்லும் சாலையில் இருபுறங்களிலும் காட்டுப்பகுதி உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாடுகள் மேய்ச்சலுக்கு செல்கின்றன. இந்நிலையில் மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 5 பசு மாடுகள் இறந்துள்ளன. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்திற்கு 2 புதிய அலுவல்சாரா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக சேவை செய்து வரும் தகுதியான திருநம்பி மற்றும் இடைபாலினம் நபர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்புடன், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.