India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொள்ளிடம் அடுத்த மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தில் வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் அசோக்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ள உரங்கள் குறித்தும் ஆய்வு செய்து விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மாவட்டத்தில் உர தேவை பற்றி ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்ட வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். நாளை (22.11.2024) வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மயிலாடுதுறையில் உள்ள யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் 500க்கு மேற்பட்ட பணி வாய்ப்புகளை வழங்க உள்ளன. இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.20) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தகவலை ஷேர் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டம் வருகின்ற நவம்பர் 23-ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் வரும் நவ.22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் நவ.21-ஆம் தேதி (வியாழன்) நள்ளிரவு முதல் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் வரும் 21-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
சீர்காழி அருகே மேலையூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான முத்து தேவேந்திரன் தனது இல்ல திருமண விழாவை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார். அவருடன் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை வட்ட அளவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் நவம்பர் 21-ஆம் தேதி காலை 9 மணி வரை தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கன மழை காரணமாக கச்சேரி சாலையில் உள்ள வணிக கடைகளில் மழை நீர் முழுவதுமாக சூழ்ந்தது. தொடர்ந்து கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் , யூனியன் கிளப் ஆகியவை இணைந்து குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.