Mayiladuthurai

News May 6, 2024

மயிலாடுதுறையில் 2ம் இடம் பிடித்த மாணவி

image

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து பள்ளியில் பயிலக்கூடிய ரதிசந்திரிக்கா என்ற மாணவி 593 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

News May 6, 2024

மயிலாடுதுறை: மறைந்த பெண்ணின் இரு கண்களும் தானம்

image

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த கோமதி என்ற பெண்மணி மறைந்த நிலையில் அவரது 2 கண்களும் இன்று தானம் செய்யப்பட்டது.தொடர்ந்து சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண்களை தானமாக பெற்றுக் கொண்டனர்.

News May 6, 2024

மயிலாடுதுறையில் மனுக்கள் மீது விசாரணை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி முன்னிலையில்,மாநில தகவல் உரிமை ஆணையர்
எம்.செல்வராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News May 6, 2024

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தினால் அவதியுறும் பொதுமக்களின் நலன் கருதி மயிலாடுதுறை ஊர் காவல் படை சார்பில் நீர் மோர் பந்தல் இன்று மயிலாடுதுறையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வட்டார தளபதி அலெக்சாண்டர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

News May 6, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.38 சதவீதமாக உள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.23 % தேர்ச்சி சதவீதம் அதிகம் என கல்வித்துறை சார்பில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

மயிலாடுதுறை:நீர் மோர் பந்தல் திறந்து வைத்த ஆதீனம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று கோடை வெயிலை ஒட்டி பொதுமக்கள் பக்தர்களுக்கு தாகத்தை தணிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு தருமபுரம் ஆதீனம் பங்கேற்று திறந்து வைத்தார்.

News May 5, 2024

மயிலாடுதுறை: ஆதினம் வழிபாடு

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு செய்தார். முன்னதாக சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

News May 4, 2024

மயிலாடுதுறை கடலோர பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து 1.5 மீட்டருக்கு கடல் அலை வீசக்கூடும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

மயிலாடுதுறையில் சிறப்பு கூட்டம்

image

மயிலாடுதுறையில் ரோட்டரி கிளப் ஆப் டெல்டாவின் சிறப்பு கூட்டம் யூனியன் கிளப்பில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து தலைவர் சங்கர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது.

News May 4, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி பகுதியில் கடந்த வருடம் ‌ ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை அலுவலர் வருகின்ற மே 14ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளார். எனவே விபத்து தொடர்பாக நேரில் சாட்சியம் அளிக்க விருப்பம் உள்ளவர்கள் காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.