Mayiladuthurai

News May 9, 2024

மயிலாடுதுறை:10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

மயிலாடுதுறை: மின்விநியோகம் பொதுமக்கள் அவதி

image

துளசேந்திரபுரம் தைக்கால், கீழவல்லம், மேலவல்லம், சாமியம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆச்சாள்புரம் மின்சார தளத்திலிருந்து மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் குறைந்த அளவு மின் அழுத்த மின் விநியோகம் செய்யப்படுவதால் வீட்டில் உள்ள டீவி, ஃபிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்து பெரும் பாதித்துள்ளதாகவும் அனைத்து கிராம பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

News May 8, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 8, 2024

மயிலாடுதுறை அருகே மழை பெய்து வருகிறது 

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் கோடையில் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் இன்று புற்று வட்டார பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டதால் ஈர காற்று வீசியது. மழை வரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 8, 2024

மயிலாடுதுறை:19 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

image

கொள்ளிடம் ஒன்றியத்தில் சிறப்பாக கல்வி பணியாற்றிய 19 ஆசிரியர்கள் இந்த வருடம் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானப் புகழேந்தி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்று ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களுடைய பணிகளை பாராட்டி சிறப்புரை ஆற்றினர்.

News May 7, 2024

மயிலாடுதுறை கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் சிறப்பு

image

மயிலாடுதுறையில் உள்ள திருமணஞ்சேரியில் அமைந்துள்ளது கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில். இக்கோயில் குறித்து 275 தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பாடியுள்ளனர். சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் இங்கு நடைபெற்றது என்ற நம்பிக்கையும் உள்ளது. திருமணங்கள் குறித்து பலரும் இங்கு வேண்டிச் செல்கின்றனர்.

News May 7, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது.இதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 7, 2024

மயிலாடுதுறை அருகே விற்பனை தீவிரம்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் ஆங்காங்கே நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் நுங்கு விற்பனை செய்யும் இடங்களில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் வெயிலில் தாக்கத்திலிருந்து அதிக அளவில் நுங்கு வாங்கி செல்கின்றனர். இதனால் நுங்கு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 7, 2024

மயிலாடுதுறை அருகே அச்சுறுத்தும் மின்கம்பிகள் 

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் கடம்பங்குடி பகுதிகளில் விவசாயிகளின் நெல் வயல்களில் மின்கம்பங்களில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன.மேலும் கை தொடும் தூரத்தில் மின்கம்பிகள் செல்வதால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 6, 2024

மயிலாடுதுறையில் அரசு பள்ளிகளில் 100% சதவீதம்

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப்பள்ளி, தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதானம் அரசு ஆதிதிராவிடர் நலன் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று அரசு பள்ளிகள் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.