India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதி தீவிர மழை மற்றும் நாளை மறுநாள் (நவ.30) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் சின்னம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக இன்று (நவ.27) முதல் நாளை (நவ.28) காலை 8.30 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பேரிடர் கால மீட்பு சம்பந்தமான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண். 1077, 04364-222588 மற்றும் மாவட்ட காவல் அலுவலக எண். 9442626792, 04364-211600 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என இன்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு சம்பந்தமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் இயங்கும் காவல் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 60 காவலர்களைக் கொண்ட இரண்டு அதிவிரைவு படைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் மழை காலங்களில் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும், சாலைகளில் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்ளவும், சாலைகளில் அறுந்து கிடக்கும் மற்றும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை தொடவோ, மிதிக்கவோ வேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து கொள்ளுமாறும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.28) காலை 8 மணி வரை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி தீவிர மழை (ரெட் அலெர்ட்) பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகளை தகுதி உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடலூர், புதுவை – காரைக்காலுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நவம்பர் 27ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.