India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரடியாக சென்று இன்று பெற்றுக்கொண்டார். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கோயம்புத்தூரில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில் இன்று மயிலாடுதுறையில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ரயில் மயிலாடுதுறைக்கு வருகை தந்து அங்கிருந்து தாம்பரம் செல்லாது என கூறப்பட்டுள்ளது. மேலும் ரயில் பயணிகள் அதற்கு தகுந்தாற்போல் தங்களது பயணத்தை மேற்கொள்ளும்படி ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.
திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக சென்னை செல்லும் வண்டி எண் 22676 சோழன் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் ரயில்கள் வழக்கம்போல் அதே நேரத்தில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மழை நீரை வடியவைத்த பிறகு பயிரின் வளா்ச்சி பருவத்தின்போது 1சதவீத யூரியா கரைசல், அதாவது ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவையும், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டையும் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் நுண்ணுயிரியை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து இடலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சி ஆனந்தகூத்தன் கிராமத்திலிருந்து புத்தூர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள மரத்தில் கதண்டு கூடு கட்டி உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். உடனடியாக கதண்டு கூட்டை அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃவெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவித்து ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை (நவ.30) பிற்பகல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது மயிலாடுதுறை, கடலூர், நாகை உள்ளிட மாவட்டங்களில் 70-90 கீ.மி வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழைவ வரை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை செய்தமைக்கு 2025 ஆம் ஆண்டில் ரூ.1,50,000க்கான காசோலை, சான்றிதழ் சர்வதேச மகளிர் தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் 5-வது தளம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு நேரில் வந்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.