Mayiladuthurai

News December 8, 2024

திருவிளையாட்டத்தில் புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

image

தரங்கம்பட்டி வட்டம் திருவிளையாட்டம், கொங்கராயம்மண்டபம், திருவிடைகழி பகுதியில் உள்ள பெட்டிகடை, மளிகை கடையில் உணவு பாதுகாப்பு, சுகாதார துறை குழுவினர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். திருவிளையாட்டம் மளிகை கடையில் ஒன்றில் புகையிலை பொருட்கள் கைபற்றி அந்த கடைக்கு அதிகாரிகள் நேற்று அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

News December 7, 2024

பொறையார்: அருகே வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து

image

தரங்கம்பாடி அருகே பொறையார் ராஜூவ்புரத்தில் வேளாங்கண்ணியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக வேலை பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

News December 7, 2024

மயிலாடுதுறை இருந்து மன்னார்குடி செல்லும் ரயில் ரத்து

image

வண்டி எண் 06404 கொண்ட மன்னார்குடி இருந்து மயிலாடுதுறை ரயில் மற்றும் மயிலாடுதுறை இருந்து மன்னார்குடி ரயில் டிசம்பர் 7 மற்றும் 22 ஆகிய இருநாட்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயில் பயணிகள் அதற்கு தகுந்தாற்போல் தங்களது பயணங்களை மேற்கொள்ளும்படி ரயில் பயணிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News December 7, 2024

மயிலாடுதுறையில் இன்று மின்தடை

image

மயிலாடுதுறை, மணக்குடி துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (டிச.7) பழைய ஸ்டேட் பேங்க் ரோடு, அரசு மருத்துவமனை, மகாதானத்தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகாா் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம் மெயின் ரோடு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மன்னம்பந்தல், சேமங்கலம், ஆலவெளி, நத்தம், மொழையூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

News December 6, 2024

பாமக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நியமனம்

image

சீர்காழி, மாதிரவேளூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய தலைவர் பா. பாலதண்டாயுதம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான நியமன ஆணையை பாமக தலைவர் ராமதாஸ் இன்று வழங்கி அவரது பணி சிறக்க வாழ்த்தினார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளருக்கு பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News December 6, 2024

சீர்காழியில் கொலை முயற்சி குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

image

சீர்காழி தென்பாதியை சேர்ந்த கிருஷ்ணன்(58) புண்ணியமூர்த்தி(38) ஆகியோருக்கு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு புண்ணியமூர்த்தி கிருஷ்ணனை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த வழக்கு சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றவாளி புண்ணியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதித்து சீர்காழி சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

News December 5, 2024

கோவிலில் வெள்ளி தேரோட்டம் அமைச்சர் பங்கேற்பதாக தகவல்

image

தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக வெள்ளி தேர் செய்யப்பட்டு இன்று வெள்ளி தேரோட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளி தேரோட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொள்வதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News December 4, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 3, 2024

மயிலாடுதுறையில் இன்று மின்தடை

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக கிளியனூர், பெருஞ்சேரி, அகர வல்லம், கோவில், கிளியனூர், ஆத்தூர், எடக்குடி, சேத்தூர், பெரம்பூர், அரசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் (டிச.03) இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார துறை தெரிவித்துள்ளது.

News December 2, 2024

மயிலாடுதுறை: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் பொதுமக்கள் பலரிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மகன் கணேசனை மயிலாடுதுறை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளின் சொத்துகளான 13 சவரன் நகையை போலீசார் குற்றவாளியிடம் இருந்து பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!