Mayiladuthurai

News December 11, 2024

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று (டிச.11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News December 10, 2024

மயிலாடுதுறை: கொலை வழக்கில் இளைஞர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த ரபீக் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் சொத்து தகராறில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது குற்றவாளியான முகமது பாசித் (19) என்பவர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

News December 10, 2024

மத்திய அமைச்சரிடம் மயிலாடுதுறை எம்பி கோரிக்கை 

image

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் ஆட்டோக்கள் மற்றும் மாநகர பேருந்துகளை அனுமதிப்பது தொடர்பாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். தொடர்ந்து மனுவினை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதி அளித்தார்.

News December 10, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை-தமிழகம் நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 11, 12, 13 மற்றும் 16-ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை உடனே ஷேர் செய்யவும்!

News December 10, 2024

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று கலந்துரையாடி கற்றல் திறனை ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் , மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News December 10, 2024

மயிலாடுதுறை மாவட்டம் மாநில அளவில் மூன்றாவது இடம்

image

மயிலாடுதுறை மாவட்டம் படைவீரர் கொடிநாள் நிதி வசூலில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்திற்கு இலக்காக கடந்த ஆண்டு ரூ 68.90 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்களின் சிறிய முயற்சியினால் அரசு இலக்கை தாண்டி 85,35,458 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News December 10, 2024

மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரயில்

image

திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக வேலூர் கன்டோன்மென்ட் வரை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் வெள்ளி கார்த்திகை தீபத்தன்று காலை 8 மணிக்கு திருச்சியில் புறப்படும் ரயில், 11:40க்கு பண்ருட்டி, மதியம் 01:25க்கு திருவண்ணாமலை வழியாக 02:50க்கு வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

தேசிய அளவிலான கபடி போட்டிக்கு சீர்காழி மாணவர் தேர்வு

image

சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தை சேர்ந்த கோவிந்து- பாக்கியவதி என்பவர்களின் மகன் ஸ்ரீதர். கல்லூரி மாணவரான இவர் பல்வேறு கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAI) மூலமாக தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற சீர்காழி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News December 9, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி வரும் 11ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News December 9, 2024

மயிலாடுதுறை: எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

image

மயிலாடுதுறை மின் கோட்டம், கடலங்குடி துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக, கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளை (டிச.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.

error: Content is protected !!