India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு பழனி , திண்டுக்கல் , திருச்சி மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரம் செல்லும் ரயிலில் நேற்று முதல் கூடுதலாக நான்கு முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதந்தன. இந்நிலையில் வருகிற டிச.16 (திங்கள்) முதல் டிச.18 (புதன்கிழமை) வரை மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நாடாளுமன்றத்தின் வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா கலந்து கொண்டார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா. இவர் நேற்று டெல்லியில் ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சென்று சந்தித்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் இடையே இரட்டைப் பாதை அமைக்க வலியுறுத்தினார்.
தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்காலங்களில் மின்கம்பங்களுக்கு அருகிலோ அல்லது பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தில் செல்லும் பொழுது முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக செல்லும்படியும் கூறப்பட்டுள்ளது.
மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயிலை டெல்லியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா இன்று நேரில் சந்தித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் மழை சேதம் தொடர்பான புகார்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-1077 மற்றும் 04364 – 222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.