India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளுக்காக மொத்தம் 300 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லக்கூடிய பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பக்கம் இரண்டு பெட்டியும், பின்பக்கம் இரண்டு பெட்டிகளும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் டிச.14 மற்றும் டிச.15ஆம் தேதிகளில் நடைபெற்ற இன்டர்நேஷனல் UCMAS அபாகஸ் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மயிலாடுதுறையை சேர்ந்த பெருஞ்சேரி அரசு பள்ளியில் பயிலும் மாணவி மகாவர்ஷினி கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ளார். பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட கூடிய மாவட்டங்களில் மயிலாடுதுறை முதலிடத்தில் உள்ளது. அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்கள், குறையும் நிலத்தடி நீர் மட்டம் உள்ளிட்ட பல காரணங்களால் வரும்காலங்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம், வறட்சி, கடும் வெப்பம், அரிசி உற்பத்தி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையை கருத்தில் கொண்ட தமிழக அரசு, தமிழகத்திலேயே முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கென பிரத்யேக மாவட்ட காலநிலை செயல்திட்டத்தை (DCAP) தயரித்துள்ளது. அதன்படி 2030-ஆம் ஆண்டுக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தில் சூரிய சக்தி மற்றும் பசுமை சார்ந்த திட்டங்கள் மூலம் காலநிலை மாற்றத்தை தடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை காக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையிலான ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர் தலையில் முடி இல்லாமலும், நீலநிற டீ ஷர்ட்டும் கருப்பு நிறத்திலான கால் சட்டையும் அணிந்திருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இ.வி.கே.எஸ். இளங்கோவன் இயற்கை எய்தியதையொட்டி இன்று அவரது இல்லத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் சுதா நேரில் சென்று நினைவு அஞ்சலி செலுத்தினார். அப்போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவுக்கு கணினி இயக்குநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு கணினி இயக்குபவா் (1) பணிக்கு விண்ணப்பிக்கலாம். கணினி சாா்ந்த பணிகளில் 1 ஆண்டு அனுபவம் வேண்டும். 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.<
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் நீர்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.