Mayiladuthurai

News December 22, 2024

அதிமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்

image

சீர்காழி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி நாதக ஒன்றிய இளைஞரணி செயலாளர் வினோத்ராஜ் ஏற்பாட்டில், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். இதில் கழக அம்மா பேரவை துணை செயலாளர் மார்கோனி, ஒன்றிய கழக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 21, 2024

திருவெண்காடு சிறுமி கொலை வழக்கு: இரட்டை ஆயுள் தண்டனை

image

திருவெண்காடு அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் குற்றவாளி கல்யாணசுந்தரத்திற்கு 2 ஆயுள் தண்டனையும் 4000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.

News December 21, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்தடை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (டிச.21) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மயிலாடுதுறை, மேக்கிரிமங்கலம், குத்தாலம், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், தரங்கம்பாடி, மங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே செய்தியை ஷேர் செய்யவும்!

News December 20, 2024

 காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் பாராட்டி இன்று சான்றிதழ்களை வழங்கினார். சிறப்பாக பணியாற்றி சான்றிதழ் பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.

News December 20, 2024

மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் ரயில் ரத்து

image

திருச்சியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணிக்கு மயிலாடுதுறை வழியாக தாம்பரம் சென்று, மீண்டும் அதே வழியில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் ரயில் (06190-06191) வருகிற டிச.27, 28, 29, 31 ஆகிய 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 

News December 20, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.21) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மயிலாடுதுறை, மேக்கிரிமங்கலம், குத்தாலம், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், தரங்கம்பாடி, மங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே செய்தியை ஷேர் செய்யவும்.

News December 19, 2024

உணவு தரம் குறித்து கேட்டறிந்த கலெக்டர்

image

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரமான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளனவா என அங்கு தங்கியுள்ள மாணவர்களிடம் கேட்டறிந்தார். 

News December 19, 2024

மயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் மயிலாடுதுறை இணைந்து நாளை டிசம்பர் 20ஆம் தேதி மயிலாடுதுறை யூனியன் கிளப் கச்சேரி சாலையில் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். ஷேர் செய்யவும்.

News December 18, 2024

மயிலாடுதுறை நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், மருத்துவ பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் சுகாதார அலுவலகம், நம்பர் 5, புதுத்தெரு, மஹால் எதிர்புறம், மயிலாடுதுறை என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் டிச-30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும்படி அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 18, 2024

டெல்லியில் மயிலாடுதுறை எம்.பி போராட்டம்

image

மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினராக பதவி வகித்து வரும் வழக்கறிஞர் சுதா நேற்று (டிச.18) டெல்லி நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு மக்களாவை தொகுதியின் உறுப்பினருமான பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார். 

error: Content is protected !!