India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு உட்பட்டவராகவும் (SC/ST- 46 வயது), குடும்பத்தின் அதிகப்பட்ச ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 04364-299790 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவக எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யவும்!
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பொதுமக்களால் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா பொதுமக்களுக்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். மேலும் நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றப்படுகிறதா என்றும், பொதுக்கழிப்பறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். இதில் நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் இணையவழி மோசடி மூலம் களவு போன ரூ.9,39,323 தொகை மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பல்வேறு தலைப்புகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட முழுவதும் 6,712 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 3,547 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 3,603 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபோல தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 302 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.42.31 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மாநில அளவிலான முதியோர் தடகளப்போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும் ட்ரிபிள் ஜம்பிங் தங்க பதக்கமும் 100 மீட்டர் வெண்கல பதக்கமும் ரிலே வெள்ளி பதக்கமும் ஆகிய நான்கு பதக்கங்களில் வெற்றி பெற்ற நமது வள்ளாலகரம் ஊராட்சியைச் சேர்ந்த குணசேகரன் சாதனை படைத்துள்ளார்.
சீர்காழி அடுத்த எடக்குடி வடபாதி பகுதியை சேர்ந்த சின்னமணி அவர்களின் மனைவி தாமரை செல்வி வயது 30 அவர்கள் இன்று காலை சமையல் செய்யும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த தகவல் கிடைத்த உடன் சம்பவம் இடத்திற்கு சென்று வைத்தீஸ்வரன் கோயில் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு செய்ய சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சீர்காழி அடுத்த நவகிரக ஸ்தலமான திருவெண்காடு புதன் ஸ்தலத்திலிருந்து திருநள்ளாறு சனி பகவான் ஸ்தலத்திற்கு புதிய பேருந்து சேவையும் சீர்காழியில் இருந்து நாகப்பட்டினம் வரை நாயக்கர் குப்பம் வழியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து சேவைகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக-வின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (டிச.30) காலை 10 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள இருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதன் இறுதிக் கட்டத்தை எட்டி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்று (டிச.30) மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.