India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழியை சேர்ந்த மணிவண்ணன் சீதா தம்பதியரின் மகள் சுபானு. இவர் சர்வதேச அளவில் பல்வேறு யோகா போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா வுமன் லீவ் யோகா போட்டியில் குழு பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். சீர்காழிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவியை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் அமைந்துள்ள 108 திவ்ய பிரதேசங்களில் 22 ஆம் திவ்யப் பிரவேசம் ஆன பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் மார்கழி வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன்ப தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (ஜன.10) காலை 5:30 மணி அளவில் நடைபெறுகிறது.
சீர்காழி அடுத்த காரைமேட்டில் அமைந்துள்ள ஓலிளாயம் சித்தர் பீடத்தில் தைவான் மணமக்களான இன்மிங்-சுஹூவா ஆகிய இருவரும் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு இருவரின் உறவினர்கள் பட்டு வேட்டி சேலை அணிந்து இந்து முறைபடி யாகம் வளர்த்து தாலி கட்டி திருமணம் செய்து வைத்தார்கள் இதில் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த அனைவருக்கும் சேலை வேட்டி இனிப்புகள் வழங்கினார்கள்.
வைத்தீஸ்வரன் கோவில் புறவழிச்சாலை பகுதியில் இன்று காலை திருச்செந்தூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து எடக்குடி வடபாதி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுனர் அந்தோணி ராஜ் (50) என்பவர் காயமடைந்தார். பயணிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டது வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் டெல்டா மண்டல செயலாளர் பெரியார் செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களை தரக்குறைவான முறையில் பேசி வரும் சீமானை கண்டித்து இன்று மாலை 4மணிக்கு சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனவும் இதில் பல்வேறு பொருப்பாளர் கலந்து கொண்டு கண்டன உரையாற்ற இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்
செங்கோட்டையில் காலை 7 மணிக்கு புறப்பட்டு வரும் ரயில் வருகின்ற ஜனவரி 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மதுரை , திண்டுக்கல் வழியே செல்லாமல் விருதுநகரில் இருந்து மானாமதுரை , புதுக்கோட்டை , திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயில் மாற்றத்திற்கு தகுந்தாற்போல் பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளி மாநில மது மற்றும் சாராய விற்பனை குறித்து தகவல் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது புகார் தெரிவிக்க 94981588 85 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் இன்று (ஜன.08) நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை பிரித்து அகற்றும் பணி தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் கட்டிடம் அமைந்துள்ள வளாகத்தில் திறந்த நிலையில் நடைபெறுகிறது. இதனிடையே இதற்கென தனி இடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கி வரும் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்களின் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அருகிலுள்ள வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.