India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் திருக்கடையூர் பொறையார் சங்கரன் பந்தல் பெரம்பூர் உட்பட பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை ஒட்டி கடைவீதிகளில் பொங்கல் கரும்பு கட்டு கட்டாக வைக்கப்பட்டு விற்பனை சூடு பிடித்துள்ளது. வாகனங்களிலும் பொங்கல் கரும்பு விற்பனை நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பொங்கல் கரும்பு வாங்குகின்றனர்.
சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக் அமுல்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மாணவர்களிடையே போதைப்பொருட்கள் மற்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது, “எந்த நிலையிலும் போதைப் பொருட்கள் அறிவாற்றலை வளர்க்காது. போதைப்பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் 9498158885 என்ற எனது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தலைமை ரயில்வே மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மு.செந்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராமநாதபுரம்- தாம்பரம் சிறப்பு ரயில் (06104) ஜனவரி 10,12 மற்றும் 17ஆகிய நாட்களில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை சீர்காழி வழியாக மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என கூறினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யவும், நீங்கள் பகுதி நேர வருவாய் ஈட்ட இது ஒரு அறிய வாய்ப்பு, மேலும் விவரங்களுக்கு 9542922022 என்ற இலக்கத்தை
மயிலாடுதுறையில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சுகாதார ஆய்வாளராக பணியாற்றும் செந்தில் (57) என்பவர் அரசு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சிக்காக வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீர்காழி அருகே மங்கைமடத்தை சேர்ந்த ராசாயண பொறியாளர் செல்வேந்திரன். இவர் கடந்த 6-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில் மீண்டும் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 150 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.புகாரின் பேரில் திருவெண்காடு போலீசார் விசாரணை செய்கின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம், மூலமாக பயணம் செய்ய ஏதுவாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சீர்காழி, மயிலாடுதுறை, செல்லும் பேருந்துகள் நடைமேடை 7 ல் நிற்கும் என தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FLII உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் 15.01.2025 (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025 (ஞாயிறு) குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.