Mayiladuthurai

News January 14, 2025

 பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு குறித்து ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே ஆத்தூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளினை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News January 14, 2025

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்

image

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இன்று காவல்துறை சார்பில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து காவலர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் காவலர்கள் பலர் பங்கேற்று சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.

News January 14, 2025

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 14 பதக்கங்கள்

image

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 9 பேர் கலந்து கொண்டு, 3 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப் பதக்கம் மற்றும் 8 வெண்கல பதக்கம் என மொத்தம் 14 பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் கதிரவன் ஆகியோருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் பாராட்டலாமே, share it

News January 13, 2025

மயிலாடுதுறை மக்களுக்கு எம்பி பொங்கல் வாழ்த்து

image

தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா மயிலாடுதுறை பொதுமக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் பதிவிட்டுள்ளார்.

News January 13, 2025

மயிலாடுதுறை மக்களுக்கு பொங்கல் வாழ்த்து

image

தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மயிலாடுதுறை பொது மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் வாழ்த்து செய்தியினை அனைவருக்கும் கூறியுள்ளார்.

News January 13, 2025

மாதாந்திர உரிமைத் தொகை வழங்கிய கவுன்சிலர்

image

மயிலாடுதுறை அருகே நகர்மன்ற உறுப்பினர் மா.ரஜினி தனது வார்டில் வசிக்கக்கூடிய வயதான மூதாட்டிக்கு மாதாந்திர உரிமைத் தொகையை இன்று வழங்கினார். தொடர்ந்து மாதம்தோறும் தன் சொந்த நிதியில் இருந்து நகர்மன்ற உறுப்பினர் வாரத்தில் உள்ள முதியவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கி வருவது அனைத்து தரப்பிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

News January 13, 2025

சீர்காழி பகுதியில் போகி பண்டிகை கொண்டாட்டம்

image

சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மார்கழி கடைசி நாளான இன்று போகிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் கூற்றுக்கு ஏற்ப சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றிணைந்து தங்கள் வீடுகளில் இருந்த தேவையற்ற பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர்.

News January 13, 2025

பூம்புகாரில் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள்

image

சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜ கஜேந்திரகுமார் வட்டாட்சியர் அருள் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 13, 2025

மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்போடு திமுக அரசு ரொக்க பணம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகை போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

News January 13, 2025

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் நேரில் சென்று ஆய்வு

image

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞான சம்பந்தர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த கட்டுமான பணிகள் குறித்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!