India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டம் ஆக்கூர் ஊராட்சியில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர். தொடர்ந்து வருவாய் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு சிட்டா நகல்களை வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எஸ்.பி ஸ்டாலின் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை மாண்புமிகு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று மாலை 6-மணி அளவில் தொடங்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார். இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன் ராஜகுமார், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
செம்பனார்கோவில் சுற்றுவட்டாரத்தில் வரும் பிப்-1 முதல் பிப்-4வரை மக்களுடன் முதல்வர் முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தமுகாமில் 5 துறைகளை சார்ந்த 40 சேவைகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. செம்பனார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த முகாம் பிப்ரவரி நான்காம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மற்றும் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளராக அமீனுல் நூர் தலைமை கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கான அறிவிப்பை சென்னையில் தவெக கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டார். தொடர்ந்து தலைவர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற நிலையில் புதிய பொறுப்பாளருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட கழக செயலாளராக குட்டி கோபி இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக மாவட்டச் செயலாளருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் பங்கேற்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (42) என்பவர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடியதாக வழக்குப் பதியப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த செல்வகுமாரை நேற்று (ஜன.28) கமுதிக்கு சென்று கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி, குன்னம் மாதிரிமங்கலம், மேக்கரிமங்கலம், திருவாலங்காடு, பாலையூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களின் மின் பாதைகளில் நாளை (ஜன.30) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் கடலங்குடி, சோழம்பேட்டை, மாந்தை, ஸ்ரீகண்டபுரம், திருமங்கலம் ஆகிய ஊர்களுக்கும், அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.