Mayiladuthurai

News February 11, 2025

தைப்பூசம் எதனால் கொண்டாடப்படுகிறது

image

தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் திதியும் சேர்ந்து வரக்கூடிய நன்நாளாகும். பார்வதி தாய் தனது தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது. தமிழ் மக்களால் தமிழ் கடவுளாக போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூசம் இருக்கிறது. தைப்பூசத்தின் சிறப்பு என்னவேறன்றால் முருகனின் அறுபடை வீடுகளுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

News February 11, 2025

தைப்பூசத்தை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு சிறப்பு அறிவிப்பு

image

தைப்பூசம் விழாவை முன்னிட்டு செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை (16848/16847) வண்டிக்கு இரு மார்க்கத்திலும் இன்று (பிப்.11) மற்றும் நாளை (பிப்.12) ஆகிய இரண்டு நாட்களுக்கு தற்காலிக நிறுத்தமாக சுவாமிமலை நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது என மயிலாடுதுறை ரயில்வே சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

மயிலாடுதுறை காவல்துறையினர் வாகன சோதனை

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுமாறு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பொழுது அவ்வழியே வருபவர்களுக்கு ஹெல்மெட் அணிந்து வருமாறு காவல் துறை தெரிவித்தனர்.

News February 10, 2025

இலவச தையல் இயந்திரங்கள் வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். இதில் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்ககள் ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டது.

News February 10, 2025

மயிலாடுதுறையில் இன்றுடன் நிறைவடைகிறது

image

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுர ஆதின கலை கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் நூலகம் இயக்கம் இணைந்து நடத்தும் மாவட்ட 3ஆவது புத்தக திருவிழா 3இன்றுடன் நிறைவடைகிறது. குறிப்பாக குழந்தைகள் தேவையான புத்தகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

News February 10, 2025

இரவில் நடைபெற்ற சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதியிலிருந்து வரும் பாதாள சாக்கடை கழிவு நீரை சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அதனால் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று இரவு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஆறுபாதி சாலையில் ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News February 9, 2025

புத்தக கண்காட்சியை பார்வையிட்ட வைத்தீஸ்வரன் கோயில் பள்ளி மாணவர்கள்

image

வைத்தீஸ்வரன் கோயில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி பயன் பெற்றனர்.

News February 9, 2025

மயிலாடுதுறையின் மூன்றாவது புத்தகத் திருவிழா 2025

image

மயிலாடுதுறையில் மூன்றாவது புத்தகத் திருவிழா 2025 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெறுகிறது. அந்நிகழ்வில் இன்று பாவலர் அறிவுமதி தமிழைப் போற்றிய சங்க மன்னர்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏ.ஆர்.சி விஸ்வநாதன் கல்லூரியின் மாணவர், மாணவிகள் வருகை புரிந்து புத்தகங்களை வாங்கியதோடு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி சான்றிதழ்கள் பெற்றனர்.

News February 9, 2025

நாளை சீர்காழி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

image

சீர்காழி வட்டம், பெருந்தோட்டம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள பெருந்தோட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரேசரின் பேரனும், பிரபல இந்திய கிரிக்கெட் வீரருமான அஸ்வின் ரவிச்சந்திரன் நாளை பெருந்தோட்டம் வருகை தர உள்ளார். SHARE IT!

News February 9, 2025

வைத்தீஸ்வரன் கோயில் எஸ்.எஸ்.ஐ மாரடைப்பால் உயிரிழப்பு

image

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் பாலசுந்தரம்   (55) சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 தினங்களாக நண்டலாறு சோதனை சாவடி பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று பணியின்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மயிலாடுதுறை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

error: Content is protected !!