Mayiladuthurai

News February 20, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கல்லூரியில் தமிழக முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் தரங்கம்பாடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்தாலோசித்தார்.

News February 20, 2025

காட்டுப்பன்றி தாக்கி விவசாய தொழிலாளி படுகாயம்

image

மயிலாடுதுறை தாலுகா ஆனந்ததாண்டவபுரத்தை அடுத்த ஆற்காடு கீழத்தெருவைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கண்ணுசாமி (60) நேற்று காலை விவசாய பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி செல்லும்போது, காட்டுப்பன்றி ஒன்று திடீரென அவரை தாக்கியுள்ளது. இதில் உடல் முழுதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 19, 2025

மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையை தட்டி கேட்ட சக்தி மற்றும் ஹரிஷ் ஆகிய 2 வாலிபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மூவேந்தன் (24), தங்கதுரை (28), ராஜ்குமார் (34), முனுசாமி (48), மஞ்சுளா (47) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முட்டம் வடக்கு தெருவைச் சேர்ந்த சஞ்சய் (22) என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.

News February 18, 2025

குழந்தை வரம் சுகப்பிரசவம் அருளும் திருச்சி தாயுமானவர் சுவாமி

image

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கீழே அமைந்துள்ளது தாயுமானவ சுவாமி கோயில். தாயுமானவரை மனம் உருகி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்கள் வாழைத்தார் வாங்கி தொட்டில் கட்டி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என கூறப்படுகிறது. இங்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான மருந்து வழங்கப்படுவது விசேஷமாகும்

News February 18, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் , மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News February 17, 2025

நியாய விலை கடை பணியாளர்களுக்கு ரொக்க பரிசு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் பங்கேற்றனர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்.

News February 17, 2025

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்

image

திருவாரூர் திருமஞ்சன வீதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (74) என்பவர் அவரது மனைவி ராணியை (59) வழியனுப்ப மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு நேற்று வந்துள்ளார். ரயிலில் ஏறி மனைவியை அமர வைத்தபோது ரயில் புறப்பட்டதால், கீழே இறங்கிய போது நிலை தடுமாறி தண்டாவாளத்துக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கினார். உடனே பயணிகள் ரயிலை நிறுத்தி, அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News February 17, 2025

சீர்காழியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

image

சீர்காழியில் வாசன் கண் மருத்துவமனை மற்றும் டாக்டர் பாலாஜி மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் நாளை (பிப்.17) புழுக்காப்பேட்டை தெருவில் உள்ள பாலாஜி அவசர மற்றும் மருத்துவ உதவி மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு கண் விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

News February 16, 2025

இரட்டை கொலை: எஸ்.பி., அறிவுறுத்தல் 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்ற வியாபாரிகளை தட்டிக் கேட்கப்பட்டு அதற்காக கல்லூரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் என தவறாக பரப்பப்படும் எந்தவித வதந்திகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!