Mayiladuthurai

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்.

News February 17, 2025

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்

image

திருவாரூர் திருமஞ்சன வீதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (74) என்பவர் அவரது மனைவி ராணியை (59) வழியனுப்ப மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு நேற்று வந்துள்ளார். ரயிலில் ஏறி மனைவியை அமர வைத்தபோது ரயில் புறப்பட்டதால், கீழே இறங்கிய போது நிலை தடுமாறி தண்டாவாளத்துக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கினார். உடனே பயணிகள் ரயிலை நிறுத்தி, அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News February 17, 2025

சீர்காழியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

image

சீர்காழியில் வாசன் கண் மருத்துவமனை மற்றும் டாக்டர் பாலாஜி மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் நாளை (பிப்.17) புழுக்காப்பேட்டை தெருவில் உள்ள பாலாஜி அவசர மற்றும் மருத்துவ உதவி மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு கண் விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

News February 16, 2025

இரட்டை கொலை: எஸ்.பி., அறிவுறுத்தல் 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்ற வியாபாரிகளை தட்டிக் கேட்கப்பட்டு அதற்காக கல்லூரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் என தவறாக பரப்பப்படும் எந்தவித வதந்திகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 15, 2025

கொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு 50 லட்சம் வழங்க வேண்டும்

image

மயிலாடுதுறை அருகே சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News February 15, 2025

இரட்டை படுகொலைக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

image

மயிலாடுதுறையில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை கடந்து போக முடியாது. 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது. இருப்பினும் இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

News February 15, 2025

தீராத கடன் பிரச்சினை இருக்கா – இந்த கோயிலுக்கு போங்க

image

கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை கிராமத்தில் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ருணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டால் தீராத கடன் பிரச்சனையும், முற்பிறவியில் செய்த பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரிய ஒளி இங்குள்ள சுவாமி அம்பாள் மீது நேரடியாக விழுவது தனி சிறப்பு.

News February 15, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு!

image

மயிலாடுதுறை, பெரம்பூர் துணை மின் நிலையங்கள் மற்றும் சேத்தூர் உயர் மின்னழுத்த மின் பாதையில் இன்று (பிப்.15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, மயிலாடுதுறை, பெரம்பூர் துணை மின்நிலையங்கள் மற்றும் சேத்தூர் உயர் மின்னழுத்த மின் பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் பண்ணுங்க..

News February 14, 2025

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் அவர்களின் சுய விபரங்கள் மற்றும் நில உடைமை விபரங்களை “விவசாயிகள் பெரும் பதிவேடு” (FARMERS REGISTRY) என்னும் புதிய திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News February 14, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பொதுமக்கள் தங்களுடைய பண பரிமாற்றத்திற்கு உதவும் யு.பி.ஐ கடவுச்சொல் மற்றும் ஏ.டி.எம் கடவுச்சொல்லை தங்களுக்கு அருகில் நிற்கும் நபர்கள் முன்னிலையில் உள்ளிடவோ அல்லது தங்களின் ஏ.டி.எம் அட்டையை யாரிடமும் பகிரவோ வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கில் இருக்கும் பணம் திருடப்படலாம் என எச்சரித்துள்ளது.

error: Content is protected !!