India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி, இன்று முதல் QR கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதி டிக்கெட் கவுண்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணம் அனுப்பியவுடன் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 500 பயனாளிகளுக்கு ரூ.14 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். மேலும், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 441 அரசு அலுவலர்களுக்கும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 காவலர்கள் என மொத்தம் 481 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.
கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (45). இவர் மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் காவலர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நடைபெற்ற 78ஆவது சுதந்திர தின விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ ஆர் சந்திரமோகன் சிறப்பாக பணியாற்றி வருவதற்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காளியப்பன் நல்லூர் ஊராட்சியில் 78ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுதா, எம்எல்ஏ நிவேதா முருகன் அகியார் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாங்கூர் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் உதவி இயக்குனர் சந்தானம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் கண் தானம் செய்த அறம் செய் அறக்கட்டளைக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று சுதந்திர தின விழாவில் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சான்றிதழை வழங்கி மேலும் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் செல்போன் வீடியோ காலில் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்து, ஐடிஐ மாணவனை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது. இதனை அடுத்து மாணவனை தாக்கிய 5 பேரை கைது செய்து, மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் குற்றவாளிகள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் நாகப்பட்டினம் சிறார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூவர்ண தேசியக்கொடி நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இன்று ஜொலித்தது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கோ. ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.