Mayiladuthurai

News January 29, 2025

தவெக மாவட்ட இணைச்செயலாளர் நியமனம்

image

மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளராக அமீனுல் நூர் தலைமை கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கான அறிவிப்பை சென்னையில் தவெக கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டார். தொடர்ந்து தலைவர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற நிலையில் புதிய பொறுப்பாளருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 29, 2025

தவெக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நியமனம்

image

மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட கழக செயலாளராக குட்டி கோபி இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக மாவட்டச் செயலாளருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 29, 2025

மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் பங்கேற்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

News January 29, 2025

மயிலாடுதுறை: 20 ஆண்டுகளாக தேடப்பட்ட திருடன் கைது

image

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (42) என்பவர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடியதாக வழக்குப் பதியப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த செல்வகுமாரை நேற்று (ஜன.28) கமுதிக்கு சென்று கைது செய்துள்ளனர்.

News January 29, 2025

மயிலாடுதுறை: மின் நிறுத்தம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி, குன்னம் மாதிரிமங்கலம், மேக்கரிமங்கலம், திருவாலங்காடு, பாலையூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களின் மின் பாதைகளில் நாளை (ஜன.30) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் கடலங்குடி, சோழம்பேட்டை, மாந்தை, ஸ்ரீகண்டபுரம், திருமங்கலம் ஆகிய ஊர்களுக்கும், அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 28, 2025

திருக்கடையூர் அபிராமி அம்மனுக்கு பால்குட அபிஷேகம்

image

திருக்கடையூர் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாளுக்கு 18-ம் ஆண்டு தை அமாவாசை பால் குடம் அபிஷேக விழா 02.01.2025 புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு திருக்கடவூர் ஆனைகுளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ எதிர்காளிஸ்வரர் ஆலயததிலிருந்து பால்குடம் புறப்பட்டு அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்பாள் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

News January 28, 2025

20 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்த செல்வகுமார் (42) என்பவர் கொள்ளிடம் பகுதியில் திருட்டு வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு போலீசாரால் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் எஸ்.பி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி ஆனைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் செல்வகுமாரை நேற்று கமுதியில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News January 28, 2025

டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினர் மீது வழக்குப்பதிவு

image

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநிலத்தில் ஜக்ஜித் சிங் டல்லேவால் போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக குடியரசு தினத்தன்று (ஜன.26) மயிலாடுதுறையில் டிராக்டர் பேரணி நடைபெற்ற நிலையில், டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் மீது அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News January 27, 2025

வெள்ளிப் பதக்கம் வென்ற சீர்காழி மாணவர்கள்

image

மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகள் பங்கேற்ற நிலையில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். வெற்றி பெற்று பதக்கம் வென்றுள்ள மாணவர்களை பள்ளி தாளாளர் ராஜ்கமல், முதல்வர் ராமலிங்கம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.

News January 27, 2025

மயிலாடுதுறை: 104 நிறுவனங்கள் மீது வழக்கு

image

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் நேற்று (ஜன.26) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு முறையாக விடுமுறை அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்காத 60 கடைகள், 43 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டார் நிறுவனம் என மொத்தம் 104 நிறுவனங்கள் மீது அதிரடியாக வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!