India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. வாராந்திர குறை தீர்ப்பு நாளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டார். மேற்படி மனுக்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின்பேரில் மதுவிலக்கு குற்றங்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 6 நாட்கள் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில், உரிமம் இல்லாமல் செயல்பட்ட 6 மதுபான கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 4 மதுபான கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் பகுதியில் இன்று கோலப்போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறுமி ஒருவர் பாலியல் சீண்டல்களை விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோலம் ஒன்றை வரைந்திருந்தார்.இதனை பார்வையிட்ட பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் துணைத் தலைவர் சம்சுதீன் ஆகியோர் சிறுமியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் திதியும் சேர்ந்து வரக்கூடிய நன்நாளாகும். பார்வதி தாய் தனது தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது. தமிழ் மக்களால் தமிழ் கடவுளாக போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூசம் இருக்கிறது. தைப்பூசத்தின் சிறப்பு என்னவேறன்றால் முருகனின் அறுபடை வீடுகளுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.
தைப்பூசம் விழாவை முன்னிட்டு செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை (16848/16847) வண்டிக்கு இரு மார்க்கத்திலும் இன்று (பிப்.11) மற்றும் நாளை (பிப்.12) ஆகிய இரண்டு நாட்களுக்கு தற்காலிக நிறுத்தமாக சுவாமிமலை நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது என மயிலாடுதுறை ரயில்வே சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுமாறு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பொழுது அவ்வழியே வருபவர்களுக்கு ஹெல்மெட் அணிந்து வருமாறு காவல் துறை தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். இதில் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்ககள் ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுர ஆதின கலை கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் நூலகம் இயக்கம் இணைந்து நடத்தும் மாவட்ட 3ஆவது புத்தக திருவிழா 3இன்றுடன் நிறைவடைகிறது. குறிப்பாக குழந்தைகள் தேவையான புத்தகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதியிலிருந்து வரும் பாதாள சாக்கடை கழிவு நீரை சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அதனால் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று இரவு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஆறுபாதி சாலையில் ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வைத்தீஸ்வரன் கோயில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி பயன் பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.