India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.15) இரவு 10 முதல் இன்று (ஜன.16) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.15) இரவு 10 முதல் இன்று (ஜன.16) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மயிலாடுதுறை, திருவாலங்காடு கிரமத்தில் வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளிச்சுற்று பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட நாள் குழந்தைபேறு வேண்டுவோர் அமாவாசையில் இங்கு சென்று புனித நீராடி புத்திரகாமேஸ்வரர் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணு

மயிலாடுதுறை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை ( 8838595483) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 டூவீலர்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 58 வாகனங்கள் வரும் ஜன.21-ம் தேதி மயிலாடுதுறை டிஎஸ்பி முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 21.01.2026 அன்று காலை 6 மணி முதல் 9 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 முதல் இன்று (ஜன.15) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.