India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி அன்று மட்டும் தஞ்சாவூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் மார்க்கமாக செல்லாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து அரியலூர், விருத்தாச்சலம் வழியாக கடலூர் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தாலம் அருகே இயங்கி வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை அவதாக குத்தாலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடந்து மேலமங்கநல்லூர் ராஜேந்திரன் என்பவரது கடைக்கும், தேரழுந்தூரை மஜீத் சம்சுதீனின் மளிகை கடைக்கும், வாணாதிராஜபுரம் முகமது ரிஸ்வான் கடைலும் புகையிலை விற்பனை செய்யப்பட்டதால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் குத்தாலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் கலந்து கொண்டார்.
2024 – 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அழைப்பு விடுத்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து முடிக்கப்பட்ட பணிகள் குறித்து அங்கிருந்து அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இராமர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக டாடா எலக்ட்ரானிக்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உற்பத்தி துறையில் பணிபுரிய அனுபவம் உள்ளவர்கள் செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று பார்வையிட்டார். தொடர்ந்து புறநோயாளிகள் பதிவு அறையில் ஆய்வு செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் வசதிகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறையில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் பல்வேறு தனியார் ஜுவல்லரிகள் இணைந்து நடத்தக்கூடிய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகின்ற செப்டம்பர் 8 ஆம் தேதி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட நகா்ப் பகுதிகளில் சமுதாய அமைப்பாளா்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படும் பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு வெளிச்சந்தை அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காரைக்காலில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்தடைந்து சென்னை செல்லும் 16176 என்ற எண் கொண்ட ரயில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எக்மோரில் 9 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வரும் 16175 என்ற எண் கொண்ட ரயில் தாம்பரத்தில் இருந்து 9.30 மணிக்கு புறப்படும் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகாராக பெற்றுக்கொண்டார். பின்னர் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.