India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக வாக்குசாவடி மையங்களுக்கு சென்று வர வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாகன வசதிகள் saksham ஆப் அல்லது 1950 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் தங்களது வீட்டிலிருந்து வாக்குசாவடி மையங்களுக்கு சென்று வர வாகன வசதி செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை நகரில் இன்று 100.40 டிகிரி அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மதிய நேரத்தில் கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஒருசிலர் குடை பிடித்துச் சென்றனர். மயிலாடுதுறையை சேர்த்து தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரி தாண்டியது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

மயிலாடுதுறையில் பிரச்சனைக்குரிய நபர்கள் , ரவுடிகள் கண்டறியப்பட்டு 195 நபர்கள் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள் 21 காவல் ஆய்வாளர்கள் , 44 அதிவிரைவு குழுக்கள் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் 1480 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். மேலும் பதற்றமான 52 வாக்கு மையங்களில் ஒவ்வொரு மையத்திலும் 1 காவலர் மற்றும் 4 மத்திய பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ராமலிங்கம் வெற்றி பெற்று எம்.பியானார். இவர், மொத்தம் 5,99,292 (54.6%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான ராஜா 263 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பூட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள் இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்ச்சனா வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலையில் திறக்கப்பட்டு 288 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் வாகனங்களுடன் தயார் நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் 100% வாக்கு பதிவு நடைபெற வேண்டி காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து இம்மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 265 காவலர்களுக்கு தபால் ஓட்டும் , 425 காவலர்களுக்கு தேர்தல் பணி சான்றை பயன்படுத்தி அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணியிடம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி யாரேனும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகள் , திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.