India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை, கீழ்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ளது நாகநாதர் கோவில். தமிழகத்தில் உள்ள நவகிரக கோவில்களில் கேதுவிற்கான ஸ்தலம் இதுவே. மூலவராக நாகநாதரிற்கு இடப்புறத்தில் கேது சன்னதி உள்ளது. இக்கோவிலில் வானவியல் சாஸ்திரத்தின் படி, கேது தோசம், நாக தோசம் உள்ளோர் இங்கு வழிபட்டு தோச நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று பள்ளியில் பெண்ணே விழித்துக் கொள் விழிப்புணர்வு குறும்படங்கள் மாணவ மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது மாணவ மாணவிகள் தங்களது சந்தேகங்களை காவல்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

வைத்தீஸ்வரன் கோவிலில் நேற்று நகரத்தார் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் எஸ்பி மீனா மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டிஎஸ்பி லாமேக் 3 ஆய்வாளர்கள் 3 உதவி ஆய்வாளர்கள் 10 காவல் ஆளினர்கள் 15 சிறப்பு காவல் படை காவலர்கள் 61 ஊர்க்காவல் படை காவலர்கள் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

கொள்ளிடம் அருகே அரசு செந்தமிழ் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓவிய போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பரிசுகள் கொடுக்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் “பெண்ணே விழித்துக் கொள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படம் இன்று திரையிடப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு குறும்படங்களை பார்வையிட்டு தங்களது சந்தேகங்களை காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மயிலாடுதுறை பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நடைமேடையில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் அமைப்பதற்கான பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் ஒன்றிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று தணிக்கை செய்தனர்.

மயிலாடுதுறை நகரத்தில் பட்டமங்கல தெருவையும் , பெரிய கடை வீதியையும் இணைக்கும் இடத்தில் குழாய் பதிப்பதற்காக சாலையின் குறுக்கே வெட்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடி சாலையை சமன்படுத்தாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சாலையை கடக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிலைத்தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சரிசெய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் பனந்தோப்பு தெரு , இந்திரா நகர் , முருகன் நகர் மற்றும் செல்வவிநாயகர் நகர் ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி கேமரா இன்று பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் மா. ரஜினி தனது சொந்த செலவில் சிசிடிவி அமைத்துக் கொடுத்தது பலதரப்பு மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.