India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குத்தாலம் வட்டாரத்தில் நாளை (செப்.18) காலை 9 மணி முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி காலை 9 மணி வரை முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி, கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 51 ஊராட்சிகளிலும் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று உரிய தீர்வு காண்பார்கள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சலவைத் தொழில் மேற்கொள்ளும் ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மக்களுக்கு, திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் உரிய விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று கொடியசைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார். தருமபுரம் ஞானாம்பிகை கல்லூரியில் வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில், 04364299790 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை கேட்டறியலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மயிலாடுத்துறையில் கடந்த நான்கு நாட்களாக பராமரிப்பு பணி காரணமாக மதியம் 12 மணிக்கு மயிலாடுத்துறையில் இருந்து செல்லக்கூடிய செங்கோட்டை ரயிலானது குத்தாலத்தில் இருந்து புறப்பட்டது. இதனிடையே செப்டம்பர் 16 இன்று முதல் செங்கோட்டை செல்லும் ரயில் மயிலாடுத்துறையில் இருந்து புறப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக தாம்பரம் செல்லக்கூடிய முற்றிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இன்று திருச்சியில் இரவு 11 மணிக்கு புறப்பட உள்ளது. மேலும் தாம்பரத்திற்கு அதிகாலை 5.20 மணிக்கு செல்லக்கூடிய நிலையில் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவெண்காடு அருகே கோணயாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகோபால் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். வீட்டில் அவரது மருமகள் வைதேகி மட்டும் இருந்த நிலையில் நள்ளிரவில் பக்கத்து அறை உடைக்கப்படும் சத்தம் கேட்டு நந்தகோபாலுக்கு தகவல் அளித்தார். அவர் வந்து பார்த்தபோது 8 பவுன் நகை மற்றும் 31ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருந்தது. புகாரின்படி திருவெண்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடியில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் ரயில் மற்றும் மாலை 5.15 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து மன்னார்குடி செல்லும் ஆகிய ரயில் செப்டம்பர் 15ஆம் தேதி நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் ரயிலு ரத்து செய்யப்படுவதாக இன்று கூறப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை 9 மணிக்கு வந்து சேரும் ரயில் நாளை (செப்டம்பர் 15ஆம் தேதி) மட்டும் குத்தாலத்துடன் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 12 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் குத்தாலத்தில் இருந்து நாளை புறப்படும் என கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வு இன்று காலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 24 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. மொத்தம் 8,293 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த நிலையில் 6227 பேர் தேர்வு எழுதினர்.
Sorry, no posts matched your criteria.