India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14,500 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 1427.96 கோடி நேரடி வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஊரகப்பகுதி மட்டுமில்லாமல் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை அருகே இருச்சக்கர வாகனத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் விஜயபாலன் போலீசாரல் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை பட்டமங்கலம் அருகே நடந்து சென்ற மலர்க்கொடி என்பவரிடம் 5 சவரன் தங்கநகையை இருச்சக்கர வாகனத்தில் வந்த விஜயபாலன் பறித்து சென்றார்.
ஆன்லைனில் வாங்கிய 6 லட்சம் கடனை அடைக்க வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 10 நாட்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பிரியா என்பவருக்கு சுய தொழில் தொடங்க ஏதுவாக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று வழங்கினார். அப்போது துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருச்செந்தூர் சென்னை ரயில் செப்டம்பர் 24 , 26 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி மட்டும் திருச்செந்தூரிலிருந்து 1 மணி நேரம் 30 நிமிடம் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் மயிலாடுதுறை மார்க்கமாக செல்வதால் வழக்கமான நேரத்தை விட குறிப்பிட்ட நாட்களில் மட்டும் காலதாமதமாக ரயில் மயிலாடுதுறை வந்து சேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் பகுதியை சேர்ந்த 37 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சர்வதேச கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மகாபாரதியை மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் உறவினர்கள் இன்று நேரில் சந்தித்தனர். தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி மனு வழங்கினர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களை விடுவிக்க 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்பி சுதா, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த சில மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட முயற்சி செய்து வருகின்றனர். மேலும் யாரேனும் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ உடனடியாக படகு மற்றும் வலை பறிமுதல் செய்வதுடன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்து பேசிய மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. ஆர்.சுதா மத்திய அரசின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா முழுவதும் 12 கோடி பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளதாகவும், இதுதான் பாஜக அரசின் சாதனை என கூறினார். ஆண்டுக்கு 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து பத்து ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.
குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் இன்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை 4.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்களின் தினசரி வருகை பதிவு செய்யும் பணியினை சரிபார்த்தார். இந்த நிகழ்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.