India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், அதிகாரிகள் உமாமகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
மயிலாடுதுறை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 18005991500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் இல்லத்தில் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்கள் பெறும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
மயிலாடுதுறை மக்களே..! RTO அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த https://parivahansewas.com/ இணையத்தில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இதில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோயிலை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஆகாஷ் (22) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பது தெரியவந்து ஆகாஷை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 2.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 3073
3. கல்வித் தகுதி: டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5. வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6. கடைசி நாள் :16.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
மணல்மேடை சேர்ந்தவர் முருகன் 46). கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று சீர்காழி முதல் மணல்மேடு வரை செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தார். இந்நிலையில் இதில் பயணியத்த ராஜேஷ் (33) என்பவரிடம் முருகன் பயணச்சீட்டு எடுக்க கூறிய நிலையில் ராஜேஷ் மறுத்து, கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறை ராஜேஸை கைது செய்தனர்.
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோயிலை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஆகாஷ் (22) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பது தெரியவந்து ஆகாஷை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 2.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை, கொள்ளிடத்தில் இருந்து தில்லைமங்கலம் கிராமத்திற்கு நேற்று வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று சாலை ஓரம் வயலில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து தகவலறிந்த ஆனைக்காரன் சத்திரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.