Mayiladuthurai

News October 1, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை தினத்தன்று 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விவரங்களை விவாதித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 1, 2024

மயிலாடுதுறையில் மதுக்கடைகளை மூட அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் FL1/FL2/FL3/FL3A/FLIM மற்றும் FL11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் வருகின்ற 02.10.2024 அதாவது நாளை காந்தி ஜெயந்தி அன்று தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

image

மயிலாடுதுறையிலிருந்து தினசரி காலை 6.20 மணிக்கு திருச்சி வழியாக சேலம் செல்லும் ரயில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 8 பெட்டிகளில் இருந்து 12 பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில் தற்போது கோரிக்கை நிறைவேறியுள்ளதால் ரயில் பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 30, 2024

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய பண்ணை குட்டைகள் வேளாண் பொறியியல் துறை சார்பில் அமைத்து தரப்படுகிறது. 2024 -2025 ஆம் ஆண்டுக்கு KAVIADP திட்டத்தின் கீழ் குத்தாலம் வட்டாரம் பெரம்பூர் பெருஞ்சேரி தத்தங்குடி கொக்கூர் தொழுதாலங்குடி தேரழந்தூர் திருமணஞ்சேரி அசிக்காடு கிராம விவசாயிகள் வேளாண்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் 9965056209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News September 30, 2024

மயிலாடுதுறையில் பயிர் காப்பீட்டுக்கு தொலைபேசி எண் அறிவிப்பு

image

தற்போது சம்பா நெல் பருவம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பயிர்களுக்கு பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு 14447 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு பயன் பெறலாம் என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த எம்பி சுதா

image

இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே மீனவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்தமைக்காக மயிலாடுதுறை மக்கள் சார்பாகவும் , மீனவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக எம்பி சுதா நேற்று தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

வைத்தீஸ்வரன் கோயில் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் முத்தையா நகரை சேர்ந்தவர் அருள்முருகன் (24). இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்து வருகின்றனர். அருள்முருகனுக்கு திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆன நிலையில் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

News September 28, 2024

ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த மக்கள்

image

கடந்த 21 ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், சின்னமேடு, சந்திரபாடி மீனவர்கள் 37 பேரை மீட்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் படகுகளை பறிமுதல் செய்தது கண்டனத்துக்குரியது என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதற்காக பூம்புகார் பகுதி மீனவ பஞ்சாயத்தார் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

News September 28, 2024

கைத்தறிக்கு மக்கள் உதவ வேண்டும் – கலெக்டர்

image

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துணி ரகங்களை வாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து துறை பணியாளர்களும் கைத்தறிக்கு கைகோர்த்து உதவிட வேண்டுமென ஆட்சியர் மகாபாரதி அப்போது கேட்டுக் கொண்டார்.

News September 28, 2024

மயிலாடுதுறை: மீண்டும் சம்மட்டி அடி என எம்.பி. அறிக்கை

image

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனை அடுத்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்களை நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விசாரணை அமைப்புகளை கூலிப்படைகளாக வைத்து எதிர்க்கட்சிகளை முடக்கும் பாஜக அரசுக்கு மீண்டும் சம்மட்டி அடி உச்ச நீதிமன்றம் கொடுத்து இருக்கிறது என அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.