India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலையூர், காவிரிப்பூம்பட்டினம், வானகிரி உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மயிலாடுதுறை மாவட்ட காவல் தேர்தல் பார்வைையாளர் ஜன்மே ஜெயாகைலாஷ், மாவட்ட எஸ்பி மீனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
சீர்காழி, கீழமாத்தூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்ந கிராமத்திற்கு எந்த அடிப்படை வசதிகளும் சரிவர கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வருகின்ற மக்களைவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் வனத்துறை சார்பில் இன்று சிறுத்தை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருப்பூர் அருகே நண்டலாற்றின் அருகில்
சிறுத்தையின் எச்சம் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்பதனை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் சீர்காழி காவல் நிலையம் சார்பில் நாகேஸ்வரமுடையார் கோவில் சந்திப்பு கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து அலுவல் பார்த்த போக்குவரத்து காவலர்கள் ஊர்க்காவல் படையினருக்கு வெயிலின் தாகத்தில் இருந்து காத்துக் கொள்ள சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை இன்று வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் , உணவு நிறுவனங்கள் , மோட்டார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் வருகின்ற ஏப்ரல் 19 மக்களவைத் தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆறு ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை முற்றிலும் குறைக்கும் வகையில் இன்று தொடர் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் சாத்திய கூறுகள் உள்ளடக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் கள உபகரணங்களை கொண்டு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் மற்றும் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சிறுத்தையை பற்றி பொய்யான வதந்திகளை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலர் பரப்புவதால் அதனை நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் சிறுத்தையை கண்டறிய கோவை WWF- India நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கியது. சிறுத்தை நடமாட்டத்தை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிய களப்பணியாளர்களுடன் கூட்டாக பணிகள் தீவிரமடைந்துள்ளது. நண்டலாறு – வீரசோழன் ஆறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை குறைக்க வனத்துறை தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டமானது ஆறு மற்றும் ஓடை ஓரங்களில் குறிப்பாக மஞ்சளாறு , மகிமலையாறு , பழைய காவேரி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோமல், காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தையை நேரில் பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் சிறுத்தையின் அடையாளம் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.