India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மயிலாடுதுறையில் உள்ள ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் துவங்கி வருகின்ற மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர் அல்லாதோர் இதில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி இந்நிலையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் நேற்று மாலையில் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்தனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஏவிசி கல்லூரியின் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்க விட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை, மாவட்ட காவல் எஸ்பி மீனா உத்தரவின்படி இன்று மயிலாடுதுறையில் ஏவிசி பொறியியல் கல்லூரியில் மக்களவைத் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு வெயிலின் தாக்கத்தினால், அவர்களின் நலன் கருதி பழச்சாறு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நீர்மோர் வழங்கப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல செயலாளர் அய்யப்பன், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் சித்தமல்லி பழனிச்சாமி உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகிகள் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததையொட்டி சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சீர்காழியில் உள்ள சட்டைநாதர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அசோக்குமார் சீனிவாசன் தனிப்பிரிவு போலீசார் மூர்த்தி காவல் ஆளிநர்கள் என 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
கொள்ளிடம் அக்ரஹார தெருவில் கடைத்தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மே 5ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தமிழ்நாடு வணிகர் சங்க மாநாட்டில் வியாபாரிகள் திரளாக பங்கேற்பது,கொள்ளிடம் கடைதெரு பகுதிகளில் குவியலாக தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறையில் முன்பகை காரணமாக கனகசபை என்பவரை ரமேஷ் மற்றும் அஜித்குமார் பீர் பாட்டிலால் கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த கனகசபை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பாக அவரது மனைவி பிரபாவதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரமேஷ் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை அருகே கேணிக்கரை பகுதியில் ஸ்ரீராம் என்ற இளைஞர் கையில் அருவாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் விரைந்து சென்று ஸ்ரீராமை கைது செய்தனர். பின்னர் ஸ்ரீராம் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் இன்று சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தகுந்த வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.