Mayiladuthurai

News October 2, 2025

மயிலாடுதுறை: பைக்கில் வீலிங் செய்த இளைஞர்

image

சீர்காழி பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் அரவிந்த் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணவாளன் மற்றும் போலீசார் நேற்று கடைவீதியில் அரவிந்தை மடக்கி பிடித்தனர். இதையடுத்து இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்

News October 2, 2025

மயிலாடுதுறை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!

News October 2, 2025

மயிலாடுதுறை: மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

image

கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுகிறதா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழவாடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து டிராக்டரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த வினோத் (24) என்பவரை கைது செய்து மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

News October 2, 2025

மயிலாடுதுறை: 12th போதும்.. ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் www.rrbapply.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத வாய்ப்பை தவறவிடாதீங்க! SHARE NOW

News October 2, 2025

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கவனத்திற்கு!

image

மக்களே (07.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.மயிலாடுதுறை வட்டாரம் – HMS திருமண மஹால், கடலங்குடி
2.சீர்காழி நகராட்சி – ராஜேஸ்வரி திருமண மண்டபம், தென்பதி. சீர்காழி
3.குத்தாலம் வட்டாரம் – அறிஞர் அண்ணா திருமண மண்டபம், மேக்கிரிமங்கலம்
4.செம்பனார்கோயில் வட்டாரம் – நயீம் திருமண மண்டபம், திருக்களாச்சேரி
மகளிர் உதவித்தொகை போன்றவை இதன் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News October 2, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 குட்கா வழக்குகள் பதிவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றத்தில் தொடர்புடைய 50 எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து 775 கி குட்கா பொருட்கள் அவர்கள் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனம் 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

News October 1, 2025

மயிலாடுதுறையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு 10 மணி முதல் (அக்.,1) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 1, 2025

மயிலாடுதுறை: ஆதார் சேவை கட்டணத்தில் மாற்றம்!

image

மயிலாடுதுறை மக்களே, 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பிற்கும், இதர பயோமெட்ரிக் புதுப்பிற்கும் 125 ரூபாயும் , டெமோகிராபிக் புதுப்பிப்பிற்கு 75 ரூபாயும் 1.10.25 முதல் 30.9.28 வரை வசூலிக்கப்படும். அதன் பின் 2031 செப்டம்பர் மாதம் முடிய புதுப்பிற்கு 150ம், டெமாகிராபிக் புதுப்பிக்க 90 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் இன்று முதல் மாற்றம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 1, 2025

மயிலாடுதுறை பாஜக முக்கிய பொறுப்பாளர்கள் நீக்கம்

image

மயிலாடுதுறை பாஜக மாவட்ட துணை தலைவர் வினோத் மற்றும் முன்னாள் மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன் ஆகியோர் கட்சியின் விரோத செயல்களிலும் , கட்சிக்கு எதிரான செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து அவர்களை கட்சிப் பொறுப்பில் இருந்து விளக்குவதாக பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 1, 2025

மயிலாடுதுறை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!