India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை பகுதிகளில் மதுவிலக்கு குற்றத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்ட பாபு என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை போலியாக பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவது தொடர்பாக மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காவலர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கிட்டப்பா அங்காடி பகுதியில் வழங்கி தகுந்த அறிவுரைகளை பொதுமக்களுக்கு கூறினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகள் பிரக் ஷா கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் நடைபெற்ற ஏழாவது மாநில அளவிலான யோகா போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் பரிசு வென்றுள்ளார். அவருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் மடத்தில் சமய பயிற்சி வகுப்பு இன்று முதல் துவங்கியது. இதனை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மத்திய அரசு மூன்று சட்ட திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது. இதனை அடுத்து திருத்தப்பட்ட சட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த காவலர்களுக்கு திருத்தம் செய்யப்பட்ட சட்டம் தொடர்பான பயிற்சியானது வழங்கப்பட்டது. இதில் ஏராளமான காவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் தென்கரைப் பகுதியில் மழையின் காரணமாக பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்து உடனடியாக அப்பகுதியை சீரமைக்க பொதுப்பணி துறையினருக்கு உத்தரவிட்டார். இதனிடையே இடிபாடுகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறையில் 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பழங்குடியினர் நல அமைச்சகத்தின் அறிவிப்பால் முதுநிலை மற்றும் முனைவர் ஆராய்ச்சி கல்வி படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினர் மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். வருகின்ற 31-ம் தேதிக்குள் https://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை டெங்கு குறித்து உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.