Mayiladuthurai

News April 5, 2024

மயிலாடுதுறை: தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறை

image

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News April 5, 2024

மயிலாடுதுறையில் தீவிர வாக்கு சேகரிப்பு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் பாபு போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நகர அதிமுக நிர்வாகிகள் பல்வேறு தெருக்களில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டனர். மேலும் பொது மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி கை சின்னத்தில் வாக்கினை செலுத்துமாறு அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

News April 5, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தை தேடும் பணி தீவிரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3வது நாளாக சிறுத்தையை பிடிக்க மதுரை மாவட்டத்தில் இருந்து 3 ராட்சத கூண்டுகள், வலைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. சிறுத்தை நடமாடிய பகுதிகளில் சென்சார் பொருந்திய கேமாராக்களுடன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் ஆனைமலை புலிகள் காப்பக வன, வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

News April 4, 2024

நாளை 9 பள்ளிகளுக்கு விடுமுறை 

image

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை ஆரோக்கிநாதபுரம் பகுதியை சேர்ந்த 9 பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஏப்ரல் 5ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

News April 4, 2024

சிறுத்தை நடமாட்டம்: அச்சப்பட வேண்டாம்

image

மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை வைத்து பிடிப்பதற்காக திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 5 வனத்துறை அலுவலர்கள் மற்றும் வால்பாறையில் இருந்து 5 வனத்துறை அலுவலர்கள் வருகை தர உள்ளனர். எனவே ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார்.

News April 4, 2024

மயிலாடுதுறை: சிறுத்தை நடமாட்டம்- அறிவுரை

image

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 4, 2024

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை

image

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகளின் விவரம்

image

மயிலாடுதுறை ரயிலடி தெருவில் உள்ள விஜய் பள்ளி மற்றும் கூறைநாடு பகுதியில் உள்ள தொல்காப்பியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அறுபத்துமூவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, செவன்த் டே நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அழகு ஜோதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பால சரஸ்வதி பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

image

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!