India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழியில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான புற்றடி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சரஸ்வதி அலங்காரத்தில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 37 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள் , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் , மது குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில் குடிபோதையில் பிரபல ரவுடி இமானுவேல் தகராறில் ஈடுபட்டு பாலு என்பவரை பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார். இது தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஜி.ஸ்டாலின் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவை அடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளி சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா மயிலாடுதுறை மக்களுக்கு ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டங்களில் அக்.14 ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும் மக்கள் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் பதவிக்கான தேர்வானது எதிர்வரும் அக்டோபர் 14 முதல் 22ஆம் தேதி வரை ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. தொடர்ந்து தேர்வு எழுத வரும் நபர்கள் குறித்த நேரத்திற்கு வரவேண்டும் எனவும் , தாமதமாக வரும் நபர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு புதிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை அக்டோபர் 11ம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு இயக்கப்பட உள்ளது. இதன் துவக்க விழா மயிலாடுதுறை ஒன்றாவது நடைமேடை ஆற்றுப்பாலம் பகுதியில் நாளை காலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும்படி ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு சம்பா (சிறப்பு பருவம்) நெல் 11, நெல் 111 (கோடை நெல்) மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று அறிவித்துள்ளார். மேலும் பணம் செலுத்தும் போது சாகுபடி செய்துள்ள கிராமம் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 45 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbmyt.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார். மேலும் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்கின்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.