Mayiladuthurai

News June 9, 2024

மயிலாடுதுறை சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இணைய வழி குற்றங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கி குற்ற மோசடி நபர்களிடம் இருந்து விழிப்பாக இருக்கும்படி தகுந்த அறிவுரைகளை வழங்கினர்.

News June 9, 2024

மயிலாடுதுறை அருகே மக்களுக்கு எச்சரிக்கை

image

தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஒட்டி இன்று மாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல் துறை அறிவுறுத்தல்.

News June 8, 2024

மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

image

தமிழக அரசு துணிநூல் துறை மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

சுடுகாட்டில் தண்ணீர் இல்லாததால் அவதி

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகில் எரிவாயு தகன மேடை சுடுகாடு அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் இன்றி துக்க விட்டார்கள் பெரும் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் இறுதிச்சடங்கு செய்ய முடியாத சூழல் இருப்பதால் போதிய அளவு தண்ணீரை நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என இன்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News June 8, 2024

மயிலாடுதுறையில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாராட்டு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் முடிவடைந்தது. தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த கல்லூரியில் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 59 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது மதுவிலக்கு அமல் பிரிவு துணை கண்காணிப்பாளர் லாமேக் உட்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News June 8, 2024

மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு

image

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, மயிலாடுதுறை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 8, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் குரூப் 4 தேர்வு நாளை ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது . இதனை முன்னிட்டு தேர்வு எழுதுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூடுதல் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வருகை தர வேண்டும் எனவும் 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

மயிலாடுதுறை: மழைக்கு வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

கோடை மழையால் பருத்தி விளைச்சல் பாதிப்பு

image

தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெய்து வரும் கோடை மழையால் பருத்தி மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்ற வேளையில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதம் பருத்தி விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. அரசு உரிய நிவாரண வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 7, 2024

ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

image

கொள்ளிடம், ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள அமிர்த குளக்கரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவங்கி வைத்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

error: Content is protected !!