Mayiladuthurai

News April 16, 2024

மயிலாடுதுறை: பிரதமர் மீது கடும் தாக்கு 

image

மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியின் நோக்கம் நல்லாட்சியை தருவது என்றும் , பிரதமர் மோடி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதில்லை என விமர்சித்தார். மேலும் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்பவர்களின் , உலக மகா ஊழலாக தேர்தல் பத்திர முறைகேடு அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.

News April 16, 2024

மயிலாடுதுறை:வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய நிர்வாகிகள்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் ஊராட்சி பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதாவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இரவிலும் நேற்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர பிரச்சாரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 15, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளும், முந்தைய நாளும் அரசியல் கட்சிகளோ , வேட்பாளர்களோ அல்லது தனியார் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி இன்று அறிவித்துள்ளார்.

News April 15, 2024

‘அதிமுக தொண்டர்களை ஏமாற்றிய இபிஎஸ்’

image

மயிலாடுதுறையில் சிபிஎம் மாநில செயலாளர் கே‌.பாலகிருஷ்ணன் நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது ஜெயலலிதா மறைவுக்குப்பின் இபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோர் மோடிக்கு காவடித்தூக்கி 4 ஆண்டுகள் ஆட்சியை தக்கவைத்தனர். தற்போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதிமுக தொண்டர்களை பழனிசாமி ஏமாற்றி வருகிறார். வலுவான கூட்டணியை அமைக்கக் கூட அதிமுகவால் முடியவில்லை என விமர்சித்தார்.

News April 15, 2024

மோடிக்கு வாக்களிக்காதீர்கள்: சீமான் பேச்சு

image

மயிலாடுதுறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவுசெய்து மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என தெரிவித்தார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறது பாஜக அரசு. ஒரே தேர்தல் நடத்தினால் நாட்டில் வறுமை ஒழிந்துவிடுமா எனவும், ஒரே நாடு என்றால் தண்ணீர் ஏன் நம் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

News April 15, 2024

மயிலாடுதுறை: திருமுலைப்பால் ஐதீக திருவிழா

image

சீர்காழியில் தேவார பாடல்பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிரம்மதீர்த்தம் கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும். அவ்வாறு இன்று காலை சட்டை நாதர் கோயில் தீர்த்தக்கரையில் திருமுலைப்பால் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

News April 14, 2024

மயிலாடுதுறையில் அமைத்துத்தரப்படும்

image

மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர்
ஆர்.சுதா கை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையடுத்து மயிலாடுதுறையில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் மூடப்பட்ட மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி ரயில் தடத்தை சீரமைத்து காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு பயணிகள் பயணம் செய்ய ஏதுவாக அமைத்துத்தரப்படும் என வேட்பாளர் சுதா தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

மயிலாடுதுறை: யாரும் குளிக்க வேண்டாம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான இன்று கடற்கரையில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

News April 14, 2024

27 ஆம் ஆண்டு பால் குட திருவிழா

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரத்தில் ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 27 ஆம் ஆண்டு சித்திரை பெருவிழா பால்குடதிருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குடங்கள், காவடி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

News April 14, 2024

மயிலாடுதுறையில் 406 பேர் கைது

image

மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் தற்போது வரை 400 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 406 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து 8437 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 3534 பாண்டி மது பாட்டில்கள் 1084 தமிழ்நாடு மது பாட்டில்கள் மற்றும் 3 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!